"வாவ்!" இதுதான் பெஸ்ட்.. ஊட்டி சாக்லேட்டை புகழ்ந்து தள்ளிய ராகுல்.. அடுத்து சொன்ன முக்கியமான மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டியில் இருக்கும் சாக்லேட் தொழிற்சாலைக்கு விசிட் அடித்த ராகுல் காந்தி, அங்கே இருக்கும் பெண் தொழிலாளர்களிடம் சாக்லேட் செய்யும் நுட்பத்தை கற்றுக் கொண்டார். இது குறித்த வீடியோவை அவர் தனது யூடியூபில் பகிர்ந்துள்ளார்.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை இப்போது பல்வேறு கட்சிகளும் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக் கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர்கள் நம்பிக்கையாகவே இருக்கிறார்கள்.

 Congress Rahul Gandhi visits Ooty chocolate factory and learns to make chocolates

அக்கட்சியின் தலைவர் கார்கே தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். அதேநேரம் மறுபுறம் ராகுல் காந்தி பல்வேறு இடங்களும் நேரடியாகச் சென்று அங்கு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார்.

ராகுல் காந்தி: இதற்கிடையே ராகுல் காந்தி ஊட்டியில் சாக்லேட் தொழிற்சாலைக்கு நேரடியாகச் சென்று அங்கே சாக்லேட் செய்யும் முறையைக் கற்றுக்கொண்ட வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக பதவியேற்றார். அப்போது ராகுல் காந்தி மீண்டும் தனது வயநாடு தொகுதிக்குச் சென்றார். இதற்காக அவர் கோவைக்கு வந்து, அங்கிருந்த ஊட்டிக்குச் சென்று அங்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்ற நிலையில், அந்த வீடியோவை தான் இப்போது பகிர்ந்துள்ளார். மிட்டாய் செய்யும் முறையை கற்கும் ராகுல் காந்தி, சாக்லேட் மீதான ஜிஎஸ்டி குறித்தும் அங்குள்ள தொழிலாளர்களிடம் விவாதித்தார். ராகுல் காந்தி இதற்காக அங்கே மொத்தம் 70 பெண்கள் பணிபுரியும் மோடிஸ் சாக்லேட்டிஸ் என்ற தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்.

வீடியோ: இந்த வீடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "70 பெண்கள் தான் ஊட்டியின் இந்த புகழ்பெற்ற சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்கள். இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் எந்தளவுக்குச் சாதிக்க முடியும் என்பதற்கான சிறு உதாரணம் தான் இந்த மோடிஸ் சாக்லேட் தொழிற்சாலை" என்று பதிவிட்டுள்ளார்.

சுமார் ஏழு நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது யூடியூபில் பகிர்ந்துள்ளார், அதில் ராகுல் காந்தி பக்காவான ஒரு சாக்லேட் தொழிலாளி போல கிளவுஸ் எல்லாம் போட்டுக் கொண்டு சாக்லேட் தயாரிக்கும் செயல்முறையைக் கற்றுக்கொள்கிறார். மேலும் அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் தமிழில் பேச, ராகுலும் தமிழை கற்றுக் கொள்ள முயல்கிறார்.

கற்றுக் கொண்டார்: அதில் ராகுல் காந்தி, "இந்த சிறு கம்பெனி பின்னணியில் முரளிதர் ராவ் மற்றும் ஸ்வாதி தம்பதி உள்ளனர். இவர்கள் மற்ற தொழில் முனைவோருக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக இங்கே பணிபுரியும் பெண்கள் குழுவும் பாராட்டத்தக்கது. 70 பெண்களைக் கொண்ட இந்த குழு, நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகவும் டேஸ்டான சாக்லேட்களை உருவாக்குகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அங்கு வந்த சிறுமி ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராப்பை கேட்டுப் பெற்றார். அப்போது ராகுல் காந்தி பதிலுக்கு அந்த சிறுமியிடமும் ஆட்டோகிராப் வாங்கினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி அப்படியே ஜிஎஸ்டி குறித்தும் பேசினார். ஜிஎஸ்டி இப்போது நாட்டில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு எதிராக உள்ளதாக அவர் சாடினார்.

முக்கியமான மேட்டர்: இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டில் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைப் போலவே இந்த மோடிஸ் நிறுவனமும் ஜிஸ்டியால் போராடுகிறது. மத்திய அரசு இப்போது ஜிஎஸ்டி வரியைப் பெரிய நிறுவனங்களுக்குச் சாதமாகவே இருப்பது போலவே வைத்துள்ளது. சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் அனைத்திற்கும் ஒரே சதவிகித ஜிஎஸ்டி முறை அவசியம்.. அதுதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+