என்னதான் சொல்றாங்கன்னு பார்ப்போம்...திமுகவிடம் கேட்க வேண்டிய 60 தொகுதிகள் பட்டியலை தயார் செய்த காங்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் அதிகபட்சம் 60 இடங்கள் கேட்பது என முடிவெடுத்து உத்தேச தொகுதிகள் பட்டியல் ஒன்றையும் தயார் செய்துள்ளதாம் தமிழக காங்கிரஸ்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக உதயசூரியன் சின்னத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. திமுகவின் இந்த முடிவு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

கூட்டணியானாலும் உதயசூரியன்

கூட்டணியானாலும் உதயசூரியன்

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளானாலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பதில்தான் உறுதியாக இருக்கிறது. அதேபோல் கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு வாரி வழங்கிய தொகுதிகள் எண்ணிக்கையை பெருமளவு குறைப்பது எனவும் முடிவு செய்திருக்கிறது.

காங். உத்தேச பட்டியல்

காங். உத்தேச பட்டியல்

இதனால் திமுக கூட்டணியில் பல கட்சிகள் வெளியேறக் கூடிய சூழ்நிலை வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த சூழ்நிலையிலும் கல்லை எறிந்து பார்ப்போம் என்கிற நிலைப்பாடுடன் களமிறங்கியிருக்கிறதாம் காங்கிரஸ். முதல் கட்டமாக தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் ஒன்றை காங்கிரஸ் தயார் செய்திருக்கிறது.

60 தொகுதிகள் கேட்கும் காங்.

60 தொகுதிகள் கேட்கும் காங்.

மொத்தம் 80 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை தமிழக காங்கிரஸ் கமிட்டி தயாரித்துள்ளது. இதில் அதிகபட்சம் 60 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது என்கிற நிலைபாட்டையும் காங்கிரஸ் எடுத்திருக்கிறதாம். நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை திமுக ஒதுக்கவே வாய்ப்பில்லை என தெரிந்தும் நெருக்கடி கொடுப்பது என தீர்க்கமான முடிவோடு இருக்கிறதாம் காங்கிரஸ்.

எத்தனை வருஷம் தாரைவார்ப்பது?

எத்தனை வருஷம் தாரைவார்ப்பது?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தூக்கி கொடுத்ததால்தான் திமுக ஆட்சியே அமைக்க முடியாமல் போனது என்பது அக்கட்சியினரின் ஆதங்கம். திமுக எளிதாக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளைக் கூட காங்கிரஸுக்கு தாரைவார்த்துக் கொண்டே இருப்பதை அக்கட்சி நிர்வாகிகள் ஏற்க முடியாது என கூறி வருகின்றனர்.

திமுக மறந்த தொகுதிகள்

திமுக மறந்த தொகுதிகள்

உதாரணமாக, கொரோனா லாக்டவுன் காலத்தில் ஸ்டாலின் நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை கூட்டத்தில் பேசிய வேடசந்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள் பலரும், இம்முறையாவது தொகுதியை நமது கட்சிக்கு ஒதுக்கிக் கொடுங்க தலைவரே.. என பகிரங்கமாகவே அழுத்தம் கொடுத்தனர். இதேபோல் பல தொகுதிகளில் திமுக பல தேர்தல்களை சந்திக்காமல் காங்கிரஸுக்கு என எழுதி வைக்கப்பட்ட கதையாக இருக்கிறது.

காங்.-க்கு அடுத்த வாய்ப்பு என்ன?

காங்.-க்கு அடுத்த வாய்ப்பு என்ன?

இப்படி காங்கிரஸுக்கு தாரைவார்ப்பதாலேயே திமுகவின் ஆட்சி அமைக்கும் கனவும் பறிபோகிறது என்பது திமுக நிர்வாகிகளின் குமுறல். இதனால் அதிகபட்சம் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 20- 25 தொகுதிகள் கிடைத்தாலே ஆச்சரியம்தான் என்கிற நிலை இருக்கிறது. அப்படி கேட்டது கிடைக்காமல் சொற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் ஐக்கியமாவது அல்லது புதிய அணியை உருவாக்குவதுதான் காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே தேர்வாகவும் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+