Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லா இருந்த கூட்டணியும்.. ’பனையூர்’ போன ப்ரவீனும்! விஜய் வேலைக்காக மாட்டார்! டெல்லிக்கு பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கை" எப்போதும் நம்மோடு தான் இருக்கும் என திமுகவினர் உறுதியாகச் சொல்லி வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது தமிழ்நாடு காங்கிரஸில் தலைவர்களிடையே அதிர்ச்சியையும், திமுக தலைமையிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் விஜயின் இல்லத்தில் இரவு நேரத்தில், ராகுல்காந்தியின் ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
இடையே நடந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு முதலில் ரகசியமாகவே இருந்தது. ஆனால் தகவல் வெளியானதும், அது காங்கிரஸுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பேச்சுவார்த்தையை பிரவீன் சக்கரவர்த்தி தனிப்பட்ட முறையில் நடத்தினாரா? அல்லது ராகுலின் விருப்பத்தோடு நடந்ததா? என்ற சந்தேகமும் எழுந்துது.

Congress Praveen Chakravarthy Vijay

பிரவீன் விஜய் சந்திப்பு

மேலும், வரும் தேர்தல் மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட அவரே நேரடியாக விருப்பம் தெரிவித்தார் என்ற செய்தியும் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும், தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் இது ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. திமுக தலைமையும் இந்தச் சம்பவம் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும், கூட்டணியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது எனவும் திமுகவினர் நேரடியாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டுகிறது.

காங்கிரஸ் திமுக பதற்றம்

2026 தேர்தலில் திமுகவின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தனியாக சாதனை படைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதால், தற்போது காங்கிரஸ் அதிக கவனத்துடன் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. அவர் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் சென்று இருக்கவில்லை. உண்மை என நிரூபிக்கப்பட்டால், மேலிடம் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் புகார்

இந்த விளக்கம், தமிழக காங்கிரஸ் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருப்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் தமிழக காங்கிரஸின் பல எம்எல்ஏக்களும், எம்பிக்களும் திமுக கூட்டணிகள் தொடர வேண்டும் எனவே விரும்புகின்றனர். சிலர் மட்டுமே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

திமுக அதிருப்தி

இதற்கிடையே பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தது திமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை தொடர்பு கொண்ட திமுக தரப்பு, பிரவீன் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், கூட்டணி நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமை தெளிவாக விளக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

2026 தேர்தல் கூட்டணி

இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி குறித்து டெல்லி தலைமைக்கு அடுத்தடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சில தலைவர்கள் புகார் அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் திமுகாவின் தயவு தேவை. 2026லும் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் தான் மக்கள் பிரதிநிதிகளை பெற முடியும். தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் கூடுதல் தொகுதிகள் தான் கிடைக்கும். ஆனால் ஒன்றிலும் வெற்றி பெற முடியாது என டெல்லிக்கு கூறியுள்ளார்களாம். மேலும், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+