எல்லை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை முன்வைத்து திமுக மீது காங்கிரஸ் செம கடுப்பு
சென்னை: சீனாவுடனான எல்லை மோதல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தை முன்வைத்து திமுக மீது காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி ஒட்டுமொத்தமாக தேசத்தை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

சோனியா சரமாரி கேள்வி
இதில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அனைத்து புலனாய்வுத் தரப்பும் தோல்வி அடைந்துவிட்டதை சோனியா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் முன்வைத்தார். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

மமதா, ஸ்டாலின் பேச்சு
ஆனால் சோனியாவை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதே பாணியை பின்பற்றவில்லை. சீனாவை விமர்சித்து பேசியதுடன் மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினர்.

மோடிக்கு ஆதரவு- ஸ்டாலின்
ஸ்டாலின் தமது பேச்சில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, 1962 இந்தியா - சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா - பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம். பண்டித ஜவகர்லால் நேருவாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என பேசினார்.

திமுக மீது காங். அதிருப்தி
அரசியல் அரங்கில் பிரதமர் மோடியை வெளிப்படையாக திமுக விமர்சிக்கிறது. ஆனாலும் பாஜகவுடன் கை கோர்க்க திமுக எப்போதும் தயாராக, ஒரு சமாதானப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு இருக்கிறது என்பது காங்கிரசார் வருத்தம். காங்கிரஸ் மேலிடமும் தாங்கள் கடுமையாக விமர்சித்து பேசும் போது தங்களுக்கு கை கொடுக்க கூட்டணி கட்சிகள் அதுவும் திமுக கூட வரவில்லையே என்கிற கடுப்பில் இருக்கிறதாம்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications