Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்மதத்துடன் கூடிய உடலுறவு பாலியல் வன்கொடுமை அல்ல.. காதல் வழக்கில் ஹைகோர்ட் நீதிபதி தந்த தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு திருமணம் செய்ய மறுப்பது பாலியல் வன்கொடுமைக்கு சமமாகாது என்று தெரிவித்த சூரஜ் செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவரை அந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவித்திருந்தது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி வன்கொடுமை செய்த நபர்மீது இளம்பெண் ஒருவர் அலகாபாத் கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் முக்கிய தீர்ப்பு என்ன?

சமீபத்தில் சூரஜ் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.. அதாவது, குஜராத் மாநிலம், டிண்டோலியைச் சேர்ந்த பிபிஏ மாணவி ஒருவர், 2022ல் கட்டர்காமைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் மீது போலீசில் புகார் அளித்தார்.

திருமணம் செய்ய மறுப்பு

அதில், அந்த மாணவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவில் இருந்ததாகவும், அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது..

இறுதியில் நீதிபதி, 'புகார்தாரர் ஒரு படித்த பெண். அவரால் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் சாதி வேறுபாடுகள் இருப்பதால் இந்த திருமணத்தை மறுத்துள்ளனர். இருந்தாலும் புகார்தாரர் தானாக முன்வந்து உறவை தொடர்ந்துள்ளார்.சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு திருமணம் செய்ய மறுப்பது பாலியல் வன்கொடுமைக்கு சமமாகாது’ என்று கூறி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்திருந்தார்.

போதை தந்து சீரழிப்பு

இந்நிலையில், மற்றொரு வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு ஒன்றினை தந்துள்ளது.. அதாவது அங்குள்ள மஹோபா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய சக ஊழியர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்..

அதில், "சக ஊழியர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்துவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்.. கடந்த 2019ல் அவரது பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து போதைப்பொருள் கொடுத்து என்னை வன்கொடுமை செய்துவிட்டார். மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டினார்..

பிறகு திருமணம் செய்வதாக உறுதி அளித்தபோதிலும், 4 வருடங்கள் கழித்து சாதி காரணம் கூறி திருமணத்தை மறுத்துவிட்டார்" என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார்.இந்த வழக்கானது எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.. எனவே இதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண், அலகாபாத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

சம்மதத்துடன் உடலுறவு

அப்போது நீதிபதி, "4 வருடங்களாக சம்மதத்துடன் உடல் ரீதியான உறவு வைத்திருந்த பிறகு, ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது.. பெண்ணும் ஆணும் பல வருடங்களாகவே ஒருமித்த காதல் உறவில் இருந்தனர். ஆனால், அந்த பெண் ஆரம்பத்திலிருந்தே சமூகக் காரணங்களால் திருமணம் சாத்தியமில்லை என்பதை அறிந்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சம்மதத்துடன் உடலுறவு இருந்தால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது.

பாலியல் வன்கொடுமை அல்ல

இதனால், பெண் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.. காதல் உறவில் இருவரும் நீண்டகாலம் ஒருமித்த சம்மதத்துடன் உடல் உறவு கொண்டிருந்தால், பிறகு திருமணம் நடக்காத நிலையில் கூட, அதனை பாலியல் வன்கொடுமை என்று சட்டரீதியாகக் கருத முடியாது"என்றார் நீதிபதி..

சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு திருமணம் செய்ய மறுப்பது பாலியல் வன்கொடுமைக்கு சமமாகாது என்று சூரஜ் நீதிமன்றம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த நிலையில், சம்மதத்துடன் கூடிய உடலுறவு பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றமும் தெளிவுபடுத்தியிருப்பது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+