நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உள்துறை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காவல் ஆய்வாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ரமணன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றுக்கு அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
துறை ரீதியான விசாரணைக்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் 6 மாதமாக குறைத்து டிஜிபி உத்தரவிட்டார். இது தொடர்பாக சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 2026 பதவி உயர்வு பட்டியலில் சந்திரசேகர் பெயரை சேர்க்க வேண்டும் என்று பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சந்திரசேகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு என்று கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ரமணன் ஆகியோர் ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இடைப்பட்ட காலத்தில், உத்தரவுகளை அமல்படுத்தினாலோ, மேல் முறையீடு செய்தாலோ இருவரும் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
-
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னை டூ நெல்லைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்கள்! கோடை லீவுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே -
மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. சென்னையின் 2 பெரிய பகுதிகளை இணைக்கும் கோடு! வரப்போகும் மெகா மாற்றம் -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications