Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் 41 பேரை தகனம் செய்த சூடு கூட குறையல! விஜய் பிரச்சார பஸ்ஸுக்கு ஆயுதபூஜை போட்ட தவெக! சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த ஊரே கலங்கி போயிருக்கும் நிலையில் தவெகவின் அலுவலகமான பனையூரில் விஜய் சென்ற பிரச்சார வாகனம், கட்சி நிர்வாகிகள் பயணித்த வாகனம், விஜய்யின் கார் உள்ளிட்டவைகளுக்கு ஆயுத பூஜை போடப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது. இந்த தேர்தலுக்காக மக்களை சந்திக்க மற்ற கட்சிகளை போல தவெகவும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார்.

karur vijay ayudha pooja

பிரச்சாரத்தின் முதல் நாளே பல மணி நேரம் விஜய் தாமதமாகவே திருச்சிக்கு வந்தார். அவர் பின்னாலேயே ஏராளமானோர் வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். இதனால் உள்ளூர் மக்களுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய்யால் போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அத்துடன் பல மணி நேரம் தாமதமாக வந்ததால் பலர் வெயிலால் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.

கேரவனை போன்று பேருந்து

இந்த பிரச்சாரத்திற்கு கேரவனை போன்ற ஒரு பேருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஓய்வறை, மீட்டிங் நடத்தும் அறை, படுக்கை அறை என கேரவனில் இருப்பது போன்று ஏராளமான வசதிகள் உள்ளன. அது போல் பேருந்தை சுற்றி நவீன ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

karur vijay ayudha pooja

என்னென்ன வசதிகள்

மேலும் அதில் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அந்த பேருந்தை சுற்றி விஜய் படத்துடன் அவரது கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோரின் படங்களும், எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் படங்களும் இடம் பெற்றிருந்தனர்.

60 அடி நீளம்

அது போல் உங்கள் விஜய் நா வரேன் என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. பேருந்தின் நிறம் கட்சி கொடியின் நிறத்தை போல் இருந்தது. இந்த வாகனம் 60 அடி நீளத்திற்கு இருந்தது. இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்த போது அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் அங்கு ஏற்கெனவே நிறைய கூட்டம் இருந்தது. இதில் 60 அடி நீள பேருந்தை அந்த கூட்டத்தில் புகுத்தியபோது, பேருந்துக்கு வழி ஏற்படுத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது போன்று கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்ததை அறிந்தும் விஜய், கரூரிலேயே இல்லாமல் திருச்சி வந்து அங்கிருந்து சென்னை வந்துவிட்டார்.

3 மணி நேரம் கழித்து

கரூர் சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து நீலாங்கரை வீட்டிற்கு சென்று ட்விட்டரில் இதயம் கலங்கிவிட்டது, நொறுங்கிவிட்டது என ட்வீட் போட்டுள்ளார். அது போல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் பல்வேறு கட்சிகள் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த நிலையில் தவெக சார்பில் ஒருத்தர் கூட அந்த இடத்தில் இல்லை.

விஜய்யை பார்க்க சென்ற மக்கள்

விஜய் போனது போல் தவெக நிர்வாகிகளும் அவரவர் ஊரை பார்த்து சென்றுவிட்டனர். இது கரூர் மக்களை கொதிப்படைய செய்தது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்திருக்கிறார்கள் என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல் விஜய் அங்கிருந்து சென்னை போனதே தவறு என பலர் விமர்சித்திருந்தனர்.

3 நாட்கள் கழித்து

இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அதாவது செவ்வாய்க்கிழமை விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கரூரில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்துவிட்டது. விரைவில் நான் உங்களை வந்து சந்திக்கிறேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் சி.எம். சார் என்றும் விஜய் பேசியிருந்தார்.

கரூர் கூட்ட நெரிசல்

நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சிறிது கூட வருந்தாமல் முதல்வர் மீது விமர்சனம் செய்து அரசியல் செய்வதா என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக தவெக தலைவர் விஜய் பயணித்த பிரச்சார பஸ், வேன்களுக்கு பனையூரில் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

ஆயுத பூஜை

அந்த வாகனங்களுக்கு வாழை கன்று கட்டி மாலை அணிவித்து நிர்வாகிகள் பூஜை செய்துள்ளனர். அது போல் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிலும் அவருடைய கார்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் ஏன் இறந்தோம் என தெரியாமல் விஜய்யை பார்க்க வந்த ஒரு காரணத்திற்காக இறந்திருக்கும் நிலையில் அவர்கள் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் ஆயுதபூஜை கொண்டாட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக நம் வீடுகளில் நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டால் பண்டிகைகளை ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது கொண்டாட மாட்டோம். ஆனால் இங்கு 41 பேர் இறந்து அவர்களின் வீடுகளில் துக்கம் அனுசரித்து வரும் நிலையில் விஜய் வீட்டிலும் அலுவலகத்திலும் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் 41 பேரை புதைத்த இடத்தில் ஈரமும் காயவில்லை, எரித்த இடத்தில் சூடும் குறையவில்லையே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+