'தளபதி 63' படப்பிடிப்பில் சம்பவம்... அட்லீ மீது துணை நடிகை போலீசில் புகார்
சென்னை: நடிகர் விஜய்யை வைத்து, இயக்கி வரும் அட்லீ மற்றும் உதவி இயக்குனர்கள் மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தெறி, மெர்சல் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், தற்காலிகமாக தளபதி 63 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், ஜாக்கி ஷரூப், ரெபா மோனிகா ஜான், விவேக், யோகி பாபு, டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பின் போது சுத்தமில்லாத உணவு வழங்கப்பட்டதால் அதை தட்டிக்கேட்ட தன்னை அட்லீ முன்னிலையில் உதவி இயக்குநர் தாக்கியதாகவும் கிருஷ்ணா தேவி தெரிவித்துள்ளார். இதனால், திரையுலகத்தினரின் கவனம் அட்லீ பக்கம் திரும்பி உள்ளது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்!












Click it and Unblock the Notifications