Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. பாமாயில், சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோலுமா? என்ன தான் தீர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. குறிப்பாக, இந்தியா போன்ற இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் சமையலறைகளில் இந்த போர் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.. ஆம், ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தால் தவித்து வரும் மக்களுக்கு, இப்போது சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது பேரிடியாக அமைந்துள்ளது..!!!

ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் முதல் சமையல் எண்ணெய் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது..

Cooking oil oil price Edible oils Iran-Israel war Palm oil -

சமையல் எண்ணெய் விலை உயர்வு

நம்முடைய இந்தியாவைப பொறுத்தவரை தனது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது..

சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தும், பாமாயில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்தும், சோயா எண்ணெய் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.. போர் சூழலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


பாமாயில் ரேட் அதிகம்

குறிப்பாக சன்பிளவர் எண்ணெய் மற்றும் பாமாயில் விலையில் இந்த அதிரடி மாற்றம் காணப்படுகிறது.. இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய செய்துள்ளது..

சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரை, சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.. போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்பதால், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையில் இன்னும் கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த இரட்டை விலையேற்றம் பெரிய பெரிய ஓட்டல்கள் முதல் சாதாரண வீடுகள் வரை அனைவரையும் விழிபிதுங்க வைத்துள்ளது.. அத்துடன் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தூண்டியுள்ளது.. எண்ணெய் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் எண்ணெயை வாங்கி சேமிக்க துவங்கிவிட்டார்கள்.. இதனால் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கும் நிலையும் நீடிக்கிறது..

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்

சமையல் எண்ணெய் தட்டுப்பாடுக்கும், விலை உயர்வுக்கும் நிரந்தரமான தீர்வு காண வேண்டுமானால், இறக்குமதி சார்ந்து இருப்பதை இந்தியா குறைக்க வேண்டும்.. இதற்கு "தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்" போன்ற திட்டங்களை அரசு இன்னும் தீவிரமாக செயல்படுத்தி, உள்நாட்டு நிலக்கடலை, கடுகு மற்றும் எள் உற்பத்தியை விவசாயிகளிடையே ஊக்குவிக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் மாற்று நாடுகளிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.. அதுமட்டுமல்லாமல், சந்தையில் பதுக்கல்களை தடுக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைத்து, செயற்கை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

ரேஷன் கடைகள்

இருந்தாலும் இப்போதைய நெருக்கடியை சமாளிக்க நுகர்வோர் என்ற ரீதியில் நாமும் சில மாற்றங்களை செய்து கொள்வது அவசியமாகிறது.. எண்ணெய்யில் பொரித்த உணவுகளை குறைத்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கலாம்.. இது பணத்தை சேமிப்பதோடு ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்..

மேலும், அரசு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பாமாயில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. சர்வதேச அரசியல் சூழல்கள் எப்படி இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவது மட்டுமே இது போன்ற எதிர்கால நெருக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் நிரந்தர தீர்வாக அமையும்.\

பெட்ரோல் விலை உயர்வு

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் இந்த விலையேற்றம் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..

இப்போதைய நிலையில் இந்திய அரசு விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், போர் நீடித்தால் லிட்டருக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. பெட்ரோல் விலை அதிகரித்தால், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு உயர்ந்து, ஒட்டுமொத்த விலைவாசியும் எகிறும் அபாயம் உள்ளது.. ஏற்கனவே சமையல் எரிவாயு மற்றும் எண்ணெய் விலையேற்றத்தால் தவித்து வரும் மக்களுக்கு, இது கூடுதல் சுமையாக அமையும்..

என்ன தீர்வு

இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், சுமார் 25 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.. இருந்தாலும், போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், வருங்காலத்தில் விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்படலாம்.. இதற்குத் தீர்வாக, இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை ரஷ்யா, கனடா மற்றும் நார்வே போன்ற மாற்று நாடுகளிடம் இருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது..

மேலும், எத்தனால் கலப்பு (Ethanol Blending) மற்றும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் மீதான தேவையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி பெட்ரோலைச் சேமிப்பதைத் தவிர்ப்பது, சந்தையில் செயற்கைத் தட்டுப்பாடு உருவாவதைத் தடுக்கும் மிக முக்கியமான தீர்வாகும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+