பெரிதாக ஆக்சன், வன்முறை காட்சிகளே இல்லையே! கூலி படத்திற்கு ஏன் A சர்டிபிகேட் தெரியுமா? இதான் காரணம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதை ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏன் 'ஏ' சான்றிதழ் வழங்கியது என்ற விவாதம் இணையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் 'ஏ' சான்றிதழ் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தையப் படங்களைப் போல 'கூலி' திரைப்படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகம் இல்லை என்று பலர் கருதுகின்றனர். கதையின்படி, சடலங்கள் தகனம் செய்யப்படும் காட்சிகள் அடிக்கடி வருவதால், இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூலி திரைப்படம்
எனினும், இந்தத் திரைப்படம் சமீபத்தில் அமலுக்கு வந்த புதிய தணிக்கை வாரிய விதிமுறைகளின் கீழ் சான்றிதழ் பெற்ற முதல் படம் என்பதுதான் 'ஏ' சான்றிதழ் கிடைத்ததற்கான முக்கிய காரணம். இனிவரும் அனைத்துப் படங்களும் இதே புதிய விதிமுறைகளின்படி தணிக்கை செய்யப்படும். இதன் காரணமாக, எதிர்காலத்தில் பல திரைப்படங்கள் 'ஏ' சான்றிதழைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் படத்தில் சித்தரிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். குற்றவாளிகள் கைகளில் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் செயல்படுவதாக சித்தரிக்கப்பட்டது தணிக்கை வாரியத்திற்கு சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
கூலி திரைப்படம் விமர்சனம்
இந்த சர்ச்சைகள் படத்தின் வெற்றியைப் பாதிக்காது என்று தியேட்டர் நிர்வாகிகள் கூறுகின்றன. முதல் நாளில் உலகளவில் ரூ. 151 கோடிக்கும் மேல் வசூலித்து, தமிழ்ப் படங்களில் புதிய சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'கூலி' திரைப்படம், வார் 2 திரைப்படம் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் விமர்சனங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பெறலாம்.
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூலி (coolie)
இந்த அதிரடி த்ரில்லர் படம், அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி தமிழ்நாட்டிற்கு வெளியிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது தனிப்பட்ட அடையாளத்தால் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டுள்ளார்.
தெலுங்கு சந்தையில் நாகார்ஜுனா, இந்தி சந்தையில் ஆமிர்கான், கன்னட சந்தையில் உபேந்திரா போன்றோரின் பங்களிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது படத்தின் மீதான வணிகரீதியான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், 'கூலி' படத்தின் தயாரிப்பு குழுவினர், நடிகர் தேர்வு விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.
கூலி பாக்ஸ் ஆபிஸ்
கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமையன்று ₹65 கோடி வசூலித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தைப் பெற்றது. இதில் தமிழகத்தில் ₹44.5 கோடி, தெலுங்கு பதிப்பு ₹15.5 கோடி, இந்தி சந்தைகள் ₹4.5 கோடி, மற்றும் கன்னடப் பகுதிகள் ₹50 லட்சம் வசூலித்தன. Coolie படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை ₹54.75 கோடி வசூலித்த போதிலும், இரண்டாம் நாளில் வசூலில் சற்று குறைவு ஏற்பட்டது. தமிழ் பதிப்பு தொடர்ந்து அதிக பங்களிப்பை வழங்கியது. தெலுங்கு மற்றும் இந்தி சந்தைகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தன. அங்கே தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக வார்2 படம் மோசமாக உள்ளதாக கூலி காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமையன்று, திரைப்படம் ₹38.6 கோடி (ஆரம்ப மதிப்பீடுகள்) வசூலித்ததன் மூலம், மூன்று நாள் மொத்த வசூல் ₹118.5 கோடியாக உயர்ந்தது. நான்கு நாள் மொத்த வசூல் தற்போது ₹158.35 கோடியை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications