Coolie: ரஜினி சாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான் - நடிகர் பார்த்திபன்
சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி சாருடனான தனது அனுபவம் மற்றும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
1975 ஆம் ஆண்டில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்த வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் 170 படங்களில் நடித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 171 ஆவது திரைப்படமான கூலி ரிலிஸாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிக்கு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் கூறியதாவது: சினிமாவில் ரஜினி சார் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். யாருமே சினிமாவில் ஆறு மாதமோ, 100 மாதமோ தாக்குப் பிடிப்பதே கஷ்டம். ஆனால், ரஜினி சார் 600 மாதங்கள், 50 ஆண்டுகள் தாக்குப் பிடித்துள்ளார். இந்த 50 ஆண்டுகளில் அவருடைய வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். இப்படி ஒருவர் மிகப்பெரிய வளர்ச்சியில் 1000 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு இளைஞர்கள் நிறைய பேர் சினிமா வந்ததற்குப் பிறகும் கூட அவரின் புகழ் மென்மேலும் ஓங்கி வளர்வதற்கு காரணம் அவருடைய வாக்குப்படி கடவுளின் ஆசிர்வாதம். எனக்குத் தெரிந்து அது ரசிகர்களின் ஆசிர்வாதம். இந்த மங்காத புகழுக்குப் பின்னாடி அவரை ரசிக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
ரஜினி சார் என்றும் நினைவுக்கு வருவது எல்லோரும் அவருடைய ஸ்டைல் என்று கூறுவார்கள். என்னைப் பொருத்தவரை நினைவுக்கு வருவது சிம்பிளிசிட்டி. இதை விட ஹம்பிளாகவும், சிம்பிளாகவும் மனிதரைப் பார்க்க முடியாது. சின்னதாக வெற்றி வந்தாலே கொம்பு, இறக்கை முளைக்கும். அவர் எல்லாவற்றையும் உதறி தூக்கி போட்டுள்ளார்..
சமீபகாலமாக அவர் மேடையில் பேசுவது அலாதியாக உள்ளது. ஒரு துண்டு காகிதம் கூட கையில் இல்லாமல், யாரையும் மறக்காமல், எல்லாருக்கும் ஒரு பஞ்ச் பேசுகிறார். எவ்வளவு பேச வேண்டும் என்பதை அறிவு சொல்லும். அதனை எப்படி பேச வேண்டும் என்று அனுபவம் சொல்லும். ஆனா எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அரங்கம் சொல்லும்.
இந்த மாதிரியான விஷயங்களை மிகப்பெரிய பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் கூட பிரம்மிப்பாக பார்க்கின்றனர். வார்த்தைகளை வடிவமைப்பது, அழகாக பிரசென்ட் செய்வது, தெளிவாக பேசுவது சமீபத்தில் நான் ரஜினியிடம் பார்த்த ஸ்டைல்.
முதன் முதலில் ரஜினி சார் சினிமாவின் கேட்டை திறந்து கொண்டு வந்த அபூர்வ ராகங்கள் பாடம் முதல் முதலில் பார்த்த படம். பாலச்சந்திரன் சாரின் தீவிர ரசிகன். அவருடைய ஒவ்வொரு படத்தையும் 10 முறையாவது பார்த்திருப்பேன். அதனால், ரஜினி சார் கேட்டை திறப்பதை 10 முறை நான் பார்த்திருக்கிறேன். யாரையும் பின்பற்றாத யாருமே பின்பற்ற முடியாத ஸ்டைல் அவரிடம் உள்ளது.
ரஜினி சார் ஒரு காட்டாறு மாதிரி. தன்னிச்சையாக தனக்கு எது சரியென்று பட்டதோ அதை எல்லம் செய்தார். நிறைய இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தார். நிறைய படங்களில் துண்டு துக்குடாவாக வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு படத்தில் பொன்னு, மாப்பிள்ளையாக ரயிலில் நடிக்கும் காட்சியில் முதன்முறையாக அவரை சந்தித்தேன். எல்லோருமே சொல்ற மாதிரி அப்போது எப்படி பழகினாரோ அப்படிதான் இப்பவும் பழகுகிறார். ஜூனியர் ஆர்டிஸ்டிடம் கூட பண்பாகத்தான் பழகுவார்.
ரஜினிசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள முயல்வது அவருடைய எளிமை. இவ்வளவு புகழ் வந்த பின்பும் எளிமையாக இருக்க முடியுமா என தெரியவில்லை. ரஜினி சாரின் வாழ்க்கையில் முக்கியமான படம் முள்ளும் மலரும். அருமையான நடிகர். முரட்டுத்தனமான அண்ணனாக இயல்பாக நடிப்பை வெளியிப்படுத்தியிருப்பார். நடிப்பாகவே இருக்காது அவ்வளவு இயல்பாக இருக்கும். கெட்ட பய சார் இந்த காளி எனும் ஸ்டைல். அது எல்லாமே முள்ளும் மலரும் படத்துக்கு அடுத்து அவர் நடித்த எனக்கு பிடித்த படம் பாஷா என்றார்.












Click it and Unblock the Notifications