கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ரூ.2000 கோடி சாத்தியமே.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு: அரசுக்கு யோசனை
சென்னை: மராட்டியத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ. 36,585 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.2044 கோடிதான், இரு மாநில பயிர்க்கடன் தள்ளுபடிக்கு இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்று தவெக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு 56 லட்சம் விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்ததோடு, கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி
ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெக அரசு சமீபத்தில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் உழவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மகாராஷ்டிர அரசை முன்மாதிரியாகக் காட்டி முதல்வர் விஜய் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான மேட்டூர் அணை திறப்பு, மேகதாது அணை அச்சுறுத்தல், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் நெல், கரும்புக்கான கூடுதல் கொள்முதல் விலை குறித்து முதல்வர் விஜய் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றியதே இந்த அரசியல் மோதலுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
கூட்டுறவு வங்கி நடவடிக்கை என்ன
குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பல்வேறு நிபந்தனைகளுடன் வெறும் 2,044 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை மராட்டிய அரசுடன் ஒப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் 36,585 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாமக அன்புமணி ராமதாஸ்
இதனால் 55.72 லட்சம் மராட்டிய உழவர்கள் பயனடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வெறும் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே 50,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டு, ஒட்டுமொத்தமாக 2,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்றும் அன்புமணி சாடியுள்ளார்.
மராட்டிய உழவர்கள் அடைந்த பயனை, தமிழ்நாட்டு உழவர்கள் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத அளவிற்கு தமிழக அரசு சுருக்கிவிட்டது என்று குறிப்பிட்ட அன்புமணி, நபார்டு வங்கி மீது பழி போடுவதை விடுத்து, விதிகளைத் தளர்த்தி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், "மனம் இருந்தால் மார்க்கமுண்டு" என்றும் முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
அன்புமணியின் இந்த விமர்சனத்திற்கு முன்னதாகவே பாஜாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இதே பாணியில் முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
"விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர அரசைப் பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள் மாற்று சக்தி என்று மேடைகளில் வீணாக முழங்குவதை விடுத்து மற்ற மாநிலங்களின் நல்முயற்சிகளைப் பின்பற்ற வேண்டும். தமிழக விவசாயிகளின் துயர் துடைக்க தற்போதைய ஏமாற்றுத் தள்ளுபடி அறிவிப்பைத் திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications