கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. அரசு அறிவித்தாலும் ஏன் லேட் ஆகுது? யாருக்கு பணம் தள்ளுபடியாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிறைய பேர் கூட்டுறவு வங்கியிலும், கூட்டுறவு சங்கத்திலும் நகையை அடகு வைக்கிறார்கள்.. ஆனால் இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலேயே கடன் வாங்குகிறார்கள்.. தள்ளுபடி வரும்போது ஏன் ஒன்றுக்கு வேகமாக கிடைக்கிறது, இன்னொன்றுக்கு லேட் ஆகுது என்று புரியாமல் குழம்புகிறார்கள்.. இந்த இரண்டு அமைப்புகளின் உண்மையான வித்தியாசம் என்னவென்று இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

கூட்டுறவு வங்கி நகைக்கடனும், கூட்டுறவு சங்க நகைக்கடனும் ஒரே மாதிரி இல்லை.. தள்ளுபடி வழங்கும் முறையிலேயே பெரிய வித்தியாசம் இருக்கிறது..

Cooperative Gold Loan

கூட்டுறவு சங்கங்கள் (PACCS) முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.. ஆனால், கூட்டுறவு வங்கிகள் (DCCB) ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நபார்டு (NABARD) விதிகளுக்குக் கட்டுப்பட்டவை.. இந்த நிர்வாக அமைப்பால் தான் தள்ளுபடி அறிவிப்பு வரும்போது ஏகப்பட்ட குழப்பங்கள் வருகின்றன.. இதனால்தான் தள்ளுபடி எப்போது வரும் என்று மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்..

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி

கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள்தான் நகைக்கடன் வாங்குவார்கள்.. விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நிதி ஒதுக்குவதால், கூட்டுறவு சங்கக் கடன்களுக்குத்தான் எப்போதும் முதல் முன்னுரிமை கிடைக்கும்.

தள்ளுபடி அறிவிப்பு வந்தவுடன் இவர்களுக்குப் பணம் மிக வேகமாக தள்ளுபடியாகும்.. அதனால்தான் சங்கங்களில் தள்ளுபடி வேலைகள் வேகமாக நடக்கிறது.. கூட்டுறவு சங்கங்களில் ஆவணங்களைச் சரிபார்ப்பதும் உள்ளூர் அளவிலேயே முடிந்துவிடுகிறது.. இதனால் பெரிய அளவில் அலைச்சல் இருக்காது..

கூட்டுறவு சங்கம் - நகை கடன்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளைத் தாண்டி நகர்ப்புற மக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பினரும் நகையை அடகு வைப்பார்கள்.. அதனால் அரசு இங்கு எடுத்த உடனே மொத்தமாகத் தள்ளுபடி தராது.. ரேஷன் கார்டு விவரங்கள், குடும்ப வருமானம் போன்ற பல தகுதிகளைக் கணக்கிட்டு, தீவிர தணிக்கைக்குப் பிறகே தள்ளுபடி பட்டியல் தயாராகும்.

தகுதி இல்லாத நபர்கள் தள்ளுபடி சலுகையைப் பெற்றுவிடக் கூடாது என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள்.. இதனால்தான் வங்கிகளில் தள்ளுபடி நடைமுறைக்கு வர கூடுதல் காலம் எடுக்கிறது..

சொந்த வைப்புத்தொகை - மானியங்கள்

கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு நேரடியாக மானியங்களை வழங்கி கடனை ஈடு செய்துவிடும்.. ஆனால், கூட்டுறவு வங்கிகள் தங்களின் சொந்த வைப்புத்தொகையை நம்பி இயங்குவதால், மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளின் இறுதி ஒப்புதல் கிடைக்கும் வரை தள்ளுபடி நடைமுறைக்கு வராது..

வங்கிகளின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப்படும்.. இதனால் வங்கிகளில் தள்ளுபடி பாஸ் ஆகி வர லேட் ஆகும்.. அரசு தள்ளுபடி என்று அறிவித்தாலும் கூட்டுறவு சங்கங்களுக்குக் கிடைக்கும் வேகம், வங்கிகளில் இருக்காது.. அங்கு விதிகளும், தணிக்கைகளும் மிகக் கடுமையாக இருக்கும்.. கடனைத் தள்ளுபடி செய்யும் போது அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகளுக்குத் தான் அதிகம் பொருந்தும்.. இதனால்தான் வங்கிகளில் தள்ளுபடி லிஸ்ட் வர தாமதம் ஆகிறது..

அரசு தள்ளுபடி அறிவிப்பு

பொதுமக்கள் நகைக்கடன் வைக்கும் போதே தாங்கள் எந்த அமைப்பில் வைக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தரும் சலுகைகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தரும் சலுகைகளும் வெவ்வேறானவை.

தள்ளுபடி அறிவிப்பு வந்தாலும் கூட, வங்கிகளில் நகையை மீட்டெடுக்க மக்கள் சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.. அதிகாரிகள் பட்டியலைச் சரிபார்த்து ஒப்புதல் தந்த பிறகே நகைகள் கைக்கு வரும்.. இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொண்டால் தள்ளுபடி குறித்த குழப்பங்கள் மக்களுக்கு வராது.. இதைப் புரிந்து கொண்டு மக்கள் செயல்பட வேண்டும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+