கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைக்கடன் முன்னுரிமை? பணியாளர்களுக்கு கூட்டுறவுத் துறையின் பெரிய ஆர்டர்
சென்னை: கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இது தொடர்பான உத்தரவினை, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார்.. இந்த உத்தரவானது பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. அது என்ன?
தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன. இவற்றில், பல்வேறு பிரிவில் கடன் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், பலர் தொடர்ந்து ஒரே கிளையில், ஒரே பிரிவில், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமல்ல சிலர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கிறார்களாம்..
கூட்டுறவு துறை - சேமிப்பு தொகை
மேலும் சில இடங்களில் கடன்களை தவறாக அனுமதி தருதல் அல்லது கடன் தொகைகளை தவறாக பதிவிடுவது, சேமிப்பு தொகைகளை தவறாக பயன்படுத்தல், குறைந்தபட்ச கணக்கு பிழைகள், தவறான வட்டி கணக்கீடு, சில சமயங்களில் நிலுவை தொகைகளை பதிவு செய்யாமல் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட பல புகார்கள் கூட்டுறவு துறையில் எழுந்த வண்ணம் இருந்தது.
நகைக்கடன் - முன்னுரிமை
அதனால்தான், நிதி, நிர்வாக அம்சங்களில் முறைகேடுகளை தவிர்க்க, ஒரே கிளை, ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மேலாண் இயக்குநர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் நந்தகுமார் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார்..
இதுகுறித்து, அப்போது அவர் அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், "மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட கிளை, பதவி, பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றவில்லை என்பதை, மேலாண் இயக்குநர் உறுதிசெய்ய வேண்டும். பணியாளர்கள் விபரங்கள், எந்த தேதியில் இருந்து பணிபுரிகின்றனர் என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவு சங்கங்கள்
ஆனால் இந்த உத்தரவை, பல மண்டல இணை பதிவாளர்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்..
அதில், இடமாற்றம் செய்து நிறைவு அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், இதுவரை அறிக்கை அனுப்பாதது ஏற்புடையதாக இல்லை. எனவே இது தொடர்பான நிறைவு அறிக்கையை, வரும் 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல இணை பதிவாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நம்பிக்கை
இந்த உத்தரவானது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.. காரணம், ஒரே இடத்தில் நீண்ட காலம் இருந்தால், கணக்கில் தவறுகள் மறைக்கப்படுவதற்கான அபாயம் அதிகம். மேலும், ஒரே அலுவலகம் அல்லது சங்கத்தில் நீண்ட காலம் பணியாற்றும் போது, தனிப்பட்ட தொடர்புகள், உள்ளூர் அழுத்தங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது
எனவே இந்த உத்தரவால் நிர்வாக வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்... அலுவலக வேலைகள் விதிமுறைப்படி நடைபெறும் நிலை உருவாகும். முறைகேடுகள், ஊழல் வாய்ப்புகள் கணிசமாக குறையும்.
கூட்டுறவு சங்கங்கள் நேர்மையாக இயங்குகின்றன என்ற நம்பிக்கை உருவானாலே, சேமிப்பு, கடன், அரசு திட்டங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்குவார்கள். இது கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சிக்கும் உதவும்.
அதைவிட முக்கியமாக, புதிய பணியாளர் பொறுப்பேற்கும்போது பழைய கணக்குகள் மீண்டும் பார்வையிட நேரிடுகிறது, அந்த நேரத்தில் மறைந்திருந்த பிழைகள் அல்லது தவறுகள் வெளிப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே இந்த டிரான்ஸ்பர் நியாயமான ஒன்று என்றே பொதுமக்கள் கருதுகிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications