கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு? தமிழக அரசு நியமித்த நிலைக்குழு! பெரும் ஆர்வத்தில் ரேஷன் ஊழியர்கள்
சென்னை: வினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சமீபத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.. இதில், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.. இந்நிலையில், ரேஷன் ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு செய்ய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த குழு இனி மேற்கொள்ளப்போகும் பணிகள் என்னென்ன?
ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கடந்த காலம்தொட்டே முன்வைத்து கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக, கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளுக்கு டிஎன்சிஎஸ்சி குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு குறைந்த எடையில் வருகிறதாம்.

லாரியில் மூட்டைகளுடன் ரேஷன் கடை பணியாளர்கள் வருவதால் எடை குறைவுக்கு அவர்களே காரணம் என்றும் திசை திருப்புகிறார்களாம்.
அதனால், குடோனில் இருந்து உணவுப்பொருட்களை ஏற்றும்போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும், பிஓஎஸ் மெஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைக்க வேண்டும், மூட்டைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடை தராசை சேர்க்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
30 அம்ச கோரிக்கைகள்
அதுமட்டுமல்ல, நெட்வொர்க் ஸ்பீடு குறைவாக இருப்பதால் ஒரு கார்டுதாரர் பிஓஎஸ் மெஷினில் ரேகை வைத்து பதிவு செய்யும்போது, திடீரென நெட்வொர்க் கிடைப்பதில்லையாம். அதேபோல விற்பனையாளர்களோடு எடையாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.
எனவேதான், பொது வினியோக திட்டத்திற்கு தனி துறையை உருவாக்க வலியுறுத்தி, சென்னையில் கடந்த 12ம் தேதியும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி, ஆயிரக்கணக்கானோர் கைதாகியிருந்தனர்.
ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய குழு
அதேபோல, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள் போன்றவற்றை நடத்தி வரும்நிலையில், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி வருகின்றனர்..
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகளை ஆய்வு செய்ய, நிலைக்குழுவை நியமித்து கூட்டுறவு துறை தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு வகை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய நிர்ணயம் குறித்த, நியாயமான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு துறையானது இந்த நிலைக்குழுவை நியமித்திருக்கிறது.
ஆய்வுக்குழுவின் வழிகாட்டுதல்கள்
கூட்டுறவு துறையின் பட்ஜெட் மற்றும் திட்டமிடல் பிரிவு கூடுதல் பதிவாளர் இந்த குழுவின் தலைவராக செயல்பட உள்ள நிலையில், ஊதிய நிர்ணயம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்வது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துவது, திருத்தங்களை பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும் என தெரிகிறது.
அதுமட்டுமல்ல, ஊதிய உயர்வு பேச்சு நடத்துவது தொடர்பான வழிகாட்டுதலையும் இந்த குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஊதியம் தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி, அதற்கேற்ப ஊதிய உயர்வு, வரும் டிசம்பருக்கும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கடைகளில் ‘பாக்கெட்’ சிஸ்டம்.. எடை மோசடி, கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி.. விஜய் அதிரடி திட்டம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications