அருணன் கேட்ட கேள்வி.. உப்பு போட்ட சோத்தை திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க.. எஸ்.வி.சேகர் கோபம்!
எழுத்தாளர் அருணனை கடுமையாக விமர்சித்து எஸ்வி சேகர் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "பதிலடி கொடுப்போம்" என்று டிரம்ப் மிரட்டியதற்கு ஒரு சங்கி தலைவரும் பொங்கவில்லையே! இவர்களது தேசம் இந்தியாவா? அமெரிக்காவா?" என்று எழுத்தாளர் அருணன் கேள்வி எழுப்பியிருந்தார்.. இதற்கு "நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தைத் திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க... சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற, ஓசி சோறு பொங்குவிங்களா? சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்தியத் துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்" என்று பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர் அருணன் கூறியதற்கு கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்
Recommended Video
கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 வருடங்களுக்கு எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் ரூ.7900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு, எதிர்ப்புமான கருத்துக்கள் வலுத்து வருகின்றன.. அந்த வகையில், எழுத்தாளர் அருணன் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். "கொரோனா நிதியில் வஞ்சனை, எம் பி தொகுதி மேம்பாட்டு நிதி பறிப்பு. இவற்றை எதிர்த்து தமிழக எம் பிக்கள் கூட்டறிக்கை வெளியிடட்டும். மோடி அரசு மசியவில்லை என்றால் அவரவர் இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தட்டும்" என்று கூறியிருந்தார்.

பிரியாணி
வழக்கமாக அருணன் எந்த பதிவு போட்டாலும் அதற்கு பதிலடி தெரிவித்து ட்வீட் போடுபவர் எஸ்வி சேகர்.. ட்வீட்டில், "நியாயம் தானே. 10-ல கமிஷன் 2 ரூபாய் வராதுன்னா, அழுகையும் ஆத்திரமும் வரத்தானே செய்யும். ஏற்கனவே 25 கொய்யா வாங்கித் தின்னவன் இனிமே பிரியாணி எதுவும் கிடைக்காதுன்னா லூசு மாதிரி கத்தத்தானே செய்வான்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
|
பதிவு
இந்த விவகாரம் முடிந்ததும், "பதிலடி கொடுப்போம்" என்று இந்தியாவை மிரட்டியிருக்கிறார் டிரம்ப். ஒரு சங்கி தலைவரும் பொங்கவில்லையே! இவர்களது தேசம் இந்தியாவா? அமெரிக்காவா?" என்று அருணன் இன்னொரு பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார். இந்த பதிவை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்து, அதற்கு எஸ்வி சேகர் பதிலளித்துள்ளார்.
|
ஓசி சோறு
அதில், "நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தைத் திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க... சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற, ஓசி சோறு பொங்குவிங்களா? பாரதி சொன்ன கூட்டத்துல ஒருத்தன் பேசற மாதிரி இல்ல, சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்தியத் துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்" என்று எழுத்தாளர் அருணன் கூறியதற்கு விமர்சனம் செய்துள்ளார்.
எஸ்வி சேகரின் இந்த பதிவு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி வருகிறது.. ஏராளமானோர் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்!
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications