"குருமா" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில் வேப்பிலை வச்சுக்கிட்டேன்".. வெள்ளந்தி பாட்டி.. வீடியோ
தலையில் வேப்பிலையை செருகி கொண்ட பெண்ணின் வீடியோ வைரலாகிறது
சென்னை: எதுக்கு தலையில வேப்பிலை வெச்சிருக்கீங்க என்று கேட்டதற்கு, "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா நோவு வந்து சாகறாங்களாமே.. என்னமோ தீங்கு வருதாம் நமக்கு" என்று துப்புரவு பணியாளர் ஒருவர் வெகு இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் பதிலளிக்கிறார்.. இந்த வீடியோ பலரால் ஈர்க்கப்பட்டு வருகிறது!!
Recommended Video
கொரோனாவைரஸ் - இன்னும்கூட இந்த வைரஸின் பேர் வாயில் நுழையாமல் பல கிராம மக்கள் உள்ளனர்.. ஆனால் பெரிய நோய் என்று மட்டும் புரிந்து கொண்டுள்ளனர்.

கொரோனாவுக்கு கிராமப்புறங்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீடு, வாசல்களில் தெளித்து வருகின்றனர்.. எனினும் கொரோனா வேப்பிலை, மஞ்ச தண்ணீரில் குணமடையும் என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை.
அந்த வகையில் பெண் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.. இவர் தன்னுடைய தலையில் வேப்பிலையை செருகி உள்ளார். தூய்மை பணியாளர்.. புதுச்சேரியை சேர்ந்தவர்.. நெற்றி நிறைய குங்குமம், மஞ்சள் பூசி மங்கலமாக காணப்படுகிறார். இவரிடம் செய்தியாளர் ஒருவர் "தலையில எதுக்கு வேப்பிலையை வெச்சிருக்கீங்க" என்று கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு அந்த பெண் முழுக்க முழுக்க வெகுளித்தனமான பதிலை வெகு யதார்த்தமாக சொல்கிறார்.. "நாடு விட்டு நாடு, நகரம் விட்டு நகரம், என்னமோ தீங்கு வருதாம்.. நாங்க இந்த பாண்டிச்சேரியில எவ்வளவோ உழைக்கிறோம், போறோம், வர்றோம்.. எங்களுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒன்னும் கிடையாது.. இந்த குருமா வருதுன்னு சொன்னாங்க.. உடனே எங்க ஊரு பசங்க என்னை அனுப்பல.. நீ போனால் திரும்பி வரமாட்டேன்னு சொன்னாங்க.. ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்கவும் தலையில வேப்பிலையை வெச்சிக்கிட்டு வந்திட்டேன்" என்றார்.
செய்தியாளர் அவரிடம் "எந்த நோய்க்காக வெச்சிருக்கிறதா சொன்னீங்க" என்று திரும்ப கேட்கிறார்.. அதற்கு "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா வந்து சாகறாங்க.. யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது" என்றார்.
உடனே செய்தியாளர், "அப்படியில்லை, குழந்தை பெத்தவங்கதான் தலையில வேப்பிலை வெச்சிப்பாங்க, நீங்க ஏன் வெச்சிருக்கீங்க" என்று கேட்க, "குருமாங்க.. மீண்டும் (தூய தமிழ்) நான் சொல்றேன், குருமா நோவு வருதுங்க.." என்றார்.
கொரோனா ஒரு தொற்று என்பதை மட்டும் கிராம மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.. அம்மை போன்ற கொள்ளை நோய்களை எப்படி விரட்டினார்களோ, அதுபோலதான் இந்த கொரோனாவையும் கிராம மக்களில் பலர் கையாண்டு வருகின்றனர்.. எனினும் யதார்த்தமாக பேசும் இந்த பெண்ணின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்!












Click it and Unblock the Notifications