கோரமண்டல் ரயில் விபத்து: விடிய விடிய நடந்த மீட்பு பணி.. பயணிகளின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்
சென்னை: கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி விடிய விடிய நடந்து வரும் நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை செண்டிரல் - கொல்கத்ஹ்டாவின் ஷாலிமார் இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த ரயில் நெற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் கிளம்பியது.

இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.
இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேன் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நாட்டையே இந்த ரயில் விபத்து உலுக்கியுள்ளது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்புக்குழுவினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் பயணித்த பயணிகள் விவரங்கள் கிடைக்கவில்லை . அது குறித்த தகவலையும் சேகரிக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications