• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. உடனே போன் பண்ணுங்க".. போகும் இடமெல்லாம் சேகர்பாபு அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பில் யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும் உடனே எனக்கு போன் பண்ணுங்க, நாங்கள் உங்களுக்காக உதவ காத்திருக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்து வருகிறார்..

நேற்றுகூட, பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை, அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். அங்கு கொரோனா சிகிச்சை பிரிவையும் ஆய்வு செய்தார்.

போச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் போச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் "தலை"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கொரோனா நோயாளிகளுக்கு முழுமையாக சிகிச்சை அளித்த பிறகே, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.. வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

இந்நிலையில், இன்றும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அவருடன் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் சென்றிருந்தார்.. தொற்று சிகிச்சை வசதிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எப்படி உள்ளன என்ற ஆய்வில் ஈடுபட்டதுடன், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுட்ககு உணவையும் தண்ணீர் பாட்டிலையும் தந்தார்.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

பிறகு செய்தியாளர்களிடம் சேகர்பாபு பேசியதாவது: "இந்த மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா தீவிரசிகிச்சைப் பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இங்குள்ள 25 ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட உள்ளது. போதிய அளவு நர்ஸ்கள், டாக்டர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் பலன் அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது... சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தற்போது செயல்பட்டு வரும் 2 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் 4 ஆக உயர்த்தப்பட உள்ளது

முதல்வர்

முதல்வர்

இதுவரைக்கும் களத்தில் அந்தந்த தொகுதி அமைச்சர்களைதான் பாரத்திருப்பீர்கள்.. ஆனால், இப்போது அப்படி இல்லை.. எம்எல்ஏக்கள், எம்பிக்களை தவிர்த்து, திமுகவில் உள்ள நிர்வாகிகள் அத்தனை பேரும் களத்தில் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின்தான்.. அனைவரையும் களத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.. எனவே எங்கள் பணி இப்படியே தொடரும்.

 போன் பண்ணுங்க

போன் பண்ணுங்க

பத்திரிகையாளர்களுக்கு ஒன்னு சொல்லணும்.. உங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஏதாவது மருத்துவ சிகிச்சையோ, அல்லது உதவி தேவைப்பட்டாலோ என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்.. போன் பண்ணுங்க.. அதேபோல மக்களும்.. காரணம், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைருக்கும் உதவ தயாராக இருக்கிறோம்.. "ஒன்றிணைவோம் வா" என்ற தலைப்பில் இந்த கொரோனாவை ஒழிக்க நாம் அனைவருமே பாடுபடுவோம்" என்றார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

உடனே செய்தியாளர்கள், நேற்றும், இன்றும் ஜி.ஹெச்சில், ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் இறந்துள்ளார்களே? என்று கேட்டனர்.. அதற்கு சேகர்பாபு., "அதற்குதான் இப்போது 160 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் 160 படுக்கைகள் ஏற்பாடு செய்ய போகிறோம்.. மேலும், ஆம்புலன்ஸில் இறந்து போன நோயாளிகள். ஏற்கனவே பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்..

மருத்துவமனை

மருத்துவமனை

அங்கு அவர்களின் நிலைமை மோசமாகிவிடவும், அந்த நோயாளிகளை வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.. அவர்கள் இங்கு வந்து சேருவதற்குள் நோய்த்தன்மை அதிகமாகிவிடுகிறது.. ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்காமலேயே இறந்துள்ளனர்.. இந்த அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை, எல்லா வசதிகளும் உள்ளது.. 24 மணி நேரமும் இங்கு பணியில் டாக்டர்கள் இருக்கிறார்கள்.. நேத்து ராத்திரி 2 மணிக்குகூட, இந்த மருத்துவமனை முதல்வருக்கு போன் செய்து நிலைமை குறித்து பேசினேன்..

சடலங்கள்

சடலங்கள்

அதேபோல மயானத்தில் சடலங்கள் வரிசையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. இறந்தவர்களின் சடலங்களை விரைவாக நல்லடக்கம் செய்ய, ஒருவர் மட்டுமே என்று அலுவலர் இருக்கும் இடத்தில் 3 ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளோம்.. இதை தவிர, எங்காவது மயானத்தில் சடலங்களை எடுத்து கொள்ளவில்லை என்று சொன்னால், அல்லது வேறு பிரச்சனை என்றால், உடனே எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.. நடவடிக்கை எடுக்கிறோம்.." என்றார்.

English summary
Corona Exposure will decrease in coming days recover, says Minister Sekhar Babu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X