தமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,610 பேர் டிஸ்சார்ஜ்..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாள்தோறும் ஐந்தாயிரம் பேருக்கும் குறையாமல் கொரோனா பாதிப்புஉறுதிச்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை.

எத்தனை பேர்
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாயிரம் என்ற நிலையிலேயே இருக்கிறது. இன்றுமட்டும் மாநிலம் முழுவதும் 5,659 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 67 பேர் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை தரப்பில் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் உயிரிப்புகளை தடுக்க முடிவதில்லை.

தொற்று அதிகரிப்பு
இதற்கு காரணம் நோய் அறிகுறி தென்பட்டவுடன் அதற்கான சோதனைகளை மேற்கொண்டு உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதில் ஏற்படும் கவனக்குறைவே எனத் தெரிவிக்கப்படுகிறது. தொற்று அதிகரித்த நிலையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. கொரோனா குறித்த சுய விழிப்புணர்வு ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மெல்ல மறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்தனர்
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 5,610 பேர் நல் வாய்ப்பாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 46,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என 186 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று மட்டும் 86,928 பேருக்கு சோதனை நடத்தப்பட்டன.

பெண்கள்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 5,659 பேரில் ஆண்கள் மட்டும் 3,476 பேர் ஆவர். அதேபோல் பெண்கள் என எடுத்துக்கொண்டால் 2,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவர கணக்குகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications