Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 2663 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்..முக கவசம் கட்டாயம்..மா.சுப்ரமணியன் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் நடமாடுபவர்கள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் இன்புளுயன்சா எச்3என்2 காய்ச்சலுக்கு 2663 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா, வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளுயன்சா எச்3என்2 வகை வைரஸ் பாதிப்பினால் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த வைரஸ் குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் பாதிக்கிறது. இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கர்நாடகா, ஹரியானாவில் மொத்தம் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கடந்த 11ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்தது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இன்புளுயன்சாவிற்கு தமிழகத்தில் உயிரிழப்பு

இன்புளுயன்சாவிற்கு தமிழகத்தில் உயிரிழப்பு

இந்நிலையில்,கடந்த 11ம் தேதி திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார். அவருக்கு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் உயிரிழந்த இளைஞருக்கு இன்புளூயன்சா வைரஸ் பரவியது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

 மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்ஃப்ளூயன்சா, எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் தொடர்ச்சியாக அதிகரித்தது வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடததப்படும் என அறிவித்து 1,586 இடங்களில் அந்த காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட முகாமில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

 தனிமை அவசியம்

தனிமை அவசியம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாது, அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல் விடப்பட்டது. இந்த காய்ச்சல் பதித்தவர்கள் வெளியில் இருமும் போதும், தும்மும் போதும் அந்த நீர் திவலைகள் மற்றவளை பதித்து காய்ச்சல் பரவக்கூடாது என்பதாலேயே அவர்களை தனிமை படுத்த வலியுறுத்தப்பட்டது.

 ஓமிக்ரான் பாதிப்பு

ஓமிக்ரான் பாதிப்பு

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பில் கொரோனா காலா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்த்து வருவதால் பெரியஅளவில் கூட்டம் கூடக்கூடிய இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம் என கூறப்படுகிறது.

 மருத்துவ கண்காணிப்பு

மருத்துவ கண்காணிப்பு

திருச்சியில் உயிரிழந்த இளைஞர் கோவா சென்று விட்டு திரும்பிய போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த இளைஞரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் குட்கிராமங்களுக்கும் சென்று சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளோம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

 மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கொரானா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் புது வித வைரஸ் காய்ச்சலுடன் கொரோனாவும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் பல மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றன. எனவே மாணவர்களும், பெற்றோர்களும் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+