தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை... மாவட்டந்தோறும் தலா 5 மையங்கள் அமைப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் தோறும் தலா 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

மையம் ஒன்றுக்கு ஒரு பொறுப்பு அதிகாரி உட்பட 25 சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சென்னை வந்திருப்பதால், தமிழகத்தில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகளை நேரடியாக மேற்பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும், மாநில குளிர்பதன் கிடங்கு மூலம் ஒன்றரை கோடி தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கடந்த 2-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை இன்று நடைபெறுகிறது.
கடந்த முறை 5 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணியின் போது சுகாதாரத்துறைக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வழங்குவார் எனத் தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தருமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications