அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..!
சென்னை: கொரோனா மீது கொலை வெறி காதலில் முள்ளுவாடி பாய்ஸ் டீம் வெளியிட்ட திருமண போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனாவை முன்வைத்து ஏராளமான மீம்ஸ் ரெக்கை கட்டி பறக்கவிடப்பட்டன. இப்போது எல்லாம் நாட்டு நடப்பை கொரோனா இல்லாமல் விமர்சிப்பது இல்லை என்பது டிரெண்டிங்காகிவிட்டது.

அட்டகாசமான பெயர்
இந்த சூழ்நிலையில் கொரோனாவை வைத்து முள்ளுவாடி இளைஞர்கள் வெளியிட்ட திருமண போஸ்டர்களோ அதகளம். அந்த ஊரின் இளைஞர் அமைப்பு பெயர் கொலைவெறி கொரோனா குரூப்ஸ், அட்டகாசம் குரூப்ஸ்.

தலைப்பு செய்தி ரேஞ்சு
இவர்கள் அடித்த போஸ்டரின் தலைப்பு.. முள்ளுவாடியில் பரபரப்பு... ஆசிரியருக்கு தொற்று உறுதி என எட்டுகால செய்தி ரேஞ்சுக்கு தலைப்பு. மணமகன் என்ற இடத்தில் தொற்றானவராம்; மணமகள் என்ற இடத்தில் தொற்றிக் கொண்டவராம். மணநாளுக்கு இவர்கள் வைத்த பெயர் தொற்று உறுதி செய்த நாளாம்.

மணமகன், மணமகள்
திருமணம் நடைபெறும் இடத்துக்கு தொற்று பரவிய இடமாம்! அப்புறம் இதுல தத்துவ முத்து வேற.. அதாவது சிகிச்சை: நண்பா, நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல... மனைவி பூர்ணாவுடன் என அதகளப்படுத்தியிருந்தனர் முள்ளுவாடி பாஸ்.

கோவிட் கோபி
இதுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த கொலைவெறி கொரோனா பாய்ஸ் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அடைமொழிதான் அதி உச்சம்டா தம்பிகளா... இருமல் இளங்கோ, காய்ச்சல் லிங்கேஸ், விழித்திரு விஸ்வா... கோவிட் கோபி, சுடுநீர் சுரேஷ்...இப்படி கொரோனா தொடர்புடையதாக ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி வேற!அப்புறம் சோசியல் மீடியாவையே தெறிக்கவிடாம என்ன செய்யும்? டேய் கொலைவெறி தம்பிகளா முடியலையடா
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications