சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுக்க.. பெற்றோரில் ஒருவரை கொரோனாவிற்கு பறிகொடுத்த 15 லட்சம் குழந்தைகள்.. ஷாக் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: உலகில் கொரோனா காரணமாக 15 லட்சம் குழந்தைகள் குறைந்தது ஒரு பெற்றோரை, உறவினரை அல்லது கார்டியனையாவது இழந்துள்ளதாக தி லான்செட் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,123 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 31,215,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 418,511 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,383,001 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனாவால் 192,213,456 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுக்க 496,211 பேர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர். 4,133,108 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

இப்படியும் ஒரு போலீஸா.. இரவு நேரங்களில் வண்டிகளை நிறுத்தி.. மதுரையே ஹேப்பி அண்ணாச்சி! இப்படியும் ஒரு போலீஸா.. இரவு நேரங்களில் வண்டிகளை நிறுத்தி.. மதுரையே ஹேப்பி அண்ணாச்சி!

 ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த நிலையில் 15 லட்சம் குழந்தைகள் குறைந்தது ஒரு பெற்றோரை, உறவினரை அல்லது கார்டியனையாவது கொரோனா காரணமாக இழந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான தி லான்செட் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1.2 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துவிட்டனர். 25,000 குழந்தைகள் தங்கள் அம்மாவை இழந்து உள்ளனர்.

அப்பா

அப்பா

90,751 குழந்தைகள் அப்பாவை இழந்து உள்ளனர். 12 குழந்தைகள் இரண்டு பெற்றோரையும் இந்தியாவில் இழந்துவிட்டனர். இன்னும் சில குழந்தைகள் பாட்டி, தாத்தா போன்ற கார்டியனாக இருந்த உறவினர்களை இழந்துள்ளனர். மொத்தத்தில் உலகம் முழுக்க 15 லட்சம் குழந்தைகள் கொரோனா காரணமாக ஒரு பாதுகாவலரை இழந்துள்ளதாக இந்த லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

மார்ச்

மார்ச்

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் 8.5 அதிகரித்து இருப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. அதோடு இப்படி பெற்றோரை இழந்த குழந்தைகள் மன ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்காலத்தில் அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக லான்செட் ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இவர்களுக்கு போதுமான கல்வி, நிதி உதவி, சுகாதாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் உலகம் முழுக்க ஒவ்வொரு 12 நொடிக்கு ஒரு குழந்தை தங்கள் பெற்றோர் அல்லது கார்டியனில் ஒருவரை இழக்கிறது. உலக நாடுகள் உடனே துரிதமாக செயல்பட்டு இந்த குழந்தைகளை காக்க வேண்டும், என்று லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.

English summary
Coronavirus: 15 Lakhs kids lost at least one of their parents to pandemic around the world says Lancet research report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X