அடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு!
சென்னை: தமிழகத்தில் சென்னையில் புழல் சிறையில் இருக்கும் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 11362 பேருக்கு சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் புழல் சிறையில் இருக்கும் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஐந்து கைதிகள் மூலம் புழலுக்கு கொரோனா பரவி உள்ளது. இவர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா இருந்துள்ளது . திருச்சியில் இருந்து புழல் வந்த சில கைதிகளுக்கு கொரோனா இருந்துள்ளது.
இந்த 30 கைதிகளும் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பு கொண்ட மற்ற கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 90 கைதிகளை அங்கு தனிமைப்படுத்தி உள்ளனர். இவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால் தற்போது ஜெயில் கைதிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயிலில்தான் பெரிய அளவில் கொரோனா பரவாமல் இருந்தது. தற்போது அங்கும் அதிக அளவில் கொரோனா பரவ தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications