காலையிலிருந்து 42 பேர்.. இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா.. மொத்தம் 300 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி!
சென்னை: இந்தியாவில் கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக மோசமான வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க 275,276 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . உலகம் முழுக்க 11384 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகமாக இந்த வைரசால் மக்கள் பலியாகி உள்ளனர்.
கொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா எப்படி
இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 240 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பலி
மொத்தமாக் 5 பேர் இந்தியா முழுக்க இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். டெல்லியில், கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸால் மக்கள் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் மார்ச் 15ம் தேதிக்கு பின்புதான் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பலரை தாக்கி உள்ளது.

கேரளா நிலை
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில்தான் இந்தியாவில் அதிக பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அதன்படி அங்கு 52 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா எப்படி
தெலுங்கானாவில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 18 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 17 பேர் இதனால் பாதிக்கப்ட்டுள்ளனர். ராஜஸ்தானில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் என்ன
லடாக்கில் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகரில் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேச நிலை
தமிழகத்தில் மொத்தம் 3 பேர் பாதித்து அதில் ஒருவர் குணப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் தமிழகத்தில் 1780 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications