8 நாட்களாக தொடரும் "ரெக்கார்ட்".. 50% கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய தமிழகம்.. எப்போது மீளும்?
தமிழகம் கொரோனா நோயாளிகளை மிக வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகம் கொரோனா நோயாளிகளை மிக வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 50% நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் கொரோனாவில் இருந்து விரைவில் மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேகம்
கொரோனா சந்தேகம் உள்ளவர்களை சோதனை செய்வதில் தமிழகம் தினமும் ரெக்கார்ட் செய்கிறது. முதலில் 200-300 என்ற எண்ணிக்கையில் கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் சோதனை செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது தினமும் 5000+ நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். கடந்த 8 நாட்களாக எல்லா நாளும் 5000+ நபர்கள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

அதிக நபர்களுக்கு சோதனை
தினமும் அதிக நபர்களை சோதனை செய்வதில் தமிழகம்தான் முதல் இடம் வகிக்கிறது. தமிழகத்தில் இதுவரை 72,403 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நபர்கள் அடிப்படையில் பார்த்தால் 62834 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று தமிழகம் 5000+ சோதனைகளை செய்து ரெக்கார்ட் செய்துள்ளது.

ஐசிஎம்ஆர் சோதனை மட்டும்
இதில் கவனிக்க வேண்டும் விஷயம் தமிழகத்தில் ஐசிஎம்ஆர் சோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மிக கடினமான இந்த சோதனை மூலமே இத்தனை பேருக்கு ஒரே நாளில் சோதனை செய்கிறார்கள். தமிழகத்திற்கு வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் சரியாக செயல்படவில்லை. அதனால் அதை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். 30+ ஐசிஎம்ஆர் சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளது.

வேகமாக குணப்படுத்துகிறது
அதே சமயம் தமிழகம் கொரோனா நோயாளிகளை மிக வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 50% நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 866 பேர் குணமடைந்து உள்ளனர். 22 பேர் பலியாகி உள்ளனர். 864 பேர் தான் இன்னும் சிகிச்சை பெற்று வரும் ஆக்ட்டிவ் கேஸ்கள்.

தமிழகத்தில் பாதி பேர் குணமடைந்து உள்ளனர்
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதி பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 114 பேர் தமிழகத்தில் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 36 பேர் ஒரே நாளில் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்குதான் அதிகமாக மொத்தம் 171 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகம் விரைவில் மீளும்
தமிழகம் கொரோனாவில் இருந்து விரைவில் மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சராசரியாக தினமும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் சராசரியாக 80 பேர் கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இன்னும் 20 நாட்களில் தமிழகத்தில் இருந்து பெரும்பாலும் கொரோனா குணப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. புதிதாக எங்கும் எபிசெண்டர் உருவாகாமல் இருந்தால் விரைவில் தமிழகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications