குழந்தை பெற்றதுமே பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனை மூடல், ஏரியாவுக்கு சீல்.. சென்னையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பத்தூர் அருகே பாடி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது...காரணம்?

    சென்னை, அம்பத்தூர் அடுத்த பாடி, சத்யா நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு ஜமீன் பல்லாவரத்தை சார்ந்த 26 வயது இளம்பெண் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    Coronavirus affect woman shifted from Chennai Padi hospital

    இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே கொரோனா தொற்று தொடர்பான ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று மதியம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, இளம் பெண்ணையும் குழந்தையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை அடுத்து, அதிகாரிகள் அங்கு பணிபுரிந்த டாக்டர்கள் 15பேரை மேற்கண்ட மருத்துவமனைக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

    மேலும் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் செல்லாதபடி, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மருத்துவமனையை சுற்றி உள்ள சாலைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+