"ஹு" சொன்ன அறிவுரை.. அப்படியே பாலோ செய்யும் தமிழகம்.. 3 நாட்களாக டெஸ்ட்டுகள் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிக அதிகமான அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிக அதிகமான அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
தனிமைப்படுத்துதல்.. டெஸ்ட்.. சிகிச்சை.. இதுதான் கொரோனாவை எதிர்கொள்ள மூன்று முக்கியமான வழி என்று உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது. அதாவது ஒருவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், அவர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.
அவர்களை தனிமைப்படுத்திய உடன் அவர்களுக்கு வேகமாக சோதனை செய்ய வேண்டும். சோதனை செய்த பின் உடனே முடிவை தெரிந்து பாசிட்டிவ் என்றால் சிகிச்சை செய்ய வேண்டும். இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் கொடுத்த மூன்று வழிமுறைகள்.

இப்படித்தான் தடுக்க முடியும்
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த முடியும். அப்படி செய்வதன் மூலம் கொரோனா நோயாளி வேறு ஒருவர் உடன் தொடர்பு கொள்வதை தடுக்க முடியும். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதை பயன்படுத்திதான் கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு நேற்று வரை 16500 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. டெஸ்டிங்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் முதல் புள்ளியாகும்.. இதில் தமிழகம் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

கேரளா மாடல்
தற்போது தமிழகம் இதே வழியை பின்பற்றி உள்ளது. ஆம், கேரளாவின் மாடலையும், உலக சுகாதார மையத்தின் அறிவுரையையும் ஏற்று தமிழக அரசு தீவிரமாக சோதனைகளை செய்து வருகிறது. தொடக்கத்தில் தமிழக அரசு 200-300 பேர் வரை மட்டுமே தினமும் சோதனை செய்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக 1000க்கும் அதிகமான நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டது.

தமிழகம் இன்றைய நிலை
தமிழகத்தில் மொத்தம் கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.

சரியான வழியில் செல்கிறது
தமிழகத்தில் கொரோனா வேகமாக அதிகரிப்பது போல தெரிந்தாலும் தமிழகம் மிகவும் சரியான வழியில் சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தமிழகம் கடந்த ஒரு வாரமாக கொரோனா சோதனைகளை வேகமாக செய்து வருகிறது. ரேபிட் கொரோனா சோதனை கருவிகளுக்காக காத்து இருக்காமல் தமிழக அரசு பிசிஆர் முறை மூலமே தமிழக அரசு கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சாரி நோயாளிகள்
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமின்றி சாரி கேஸ் உள்ளவர்களையும் தமிழகம் சோதனை செய்ய தொடங்கி உள்ளது. 'சாரி' என்று அழைக்கப்படும் தீவிர சுவாச நோய் தொற்று (severe acute respiratory illness) அறிகுறி இருந்த 69 பேருக்கு தமிழகத்தில் நேற்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இன்று சாரி உள்ளவர்கள் 60 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

ஸ்டேஜ் 3 இல்லை
இப்படி சாரி அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை செய்வதன் மூலம் ஒரு பகுதியில் ஸ்டேஜ் 3 எனப்படும் சமூக பரவல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படும். இது ரேண்டம் சோதனை போல செய்யப்படும். தமிழகத்தில் இப்படி சாரி சோதனை செய்யப்பட்ட யாருக்கும் கொரோனா இல்லை.இதன் மூலம் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாரி கேஸ் சோதனைகள் தமிழகத்தில் வேகமாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை அதிகம்
தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகள் 21,994 ஆயிரம் ஆகும். இதில் சிலருக்கு இரண்டு, மூன்று முறை (சிகிச்சை பெற்ற பின் செய்யப்பட்ட சோதனை சேர்த்து) செய்யப்பட்டுள்ளது. தனியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்கள் 17,835 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட சோதனைகள் 2,739 ஆகும்.தமிழகத்தில் நேற்று முதல் நாள் 2091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

செம தமிழகம்
நேற்று மட்டும் 6509 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டு முடிவுகள் வந்துள்ளது. தமிழகம் கொரோனா சோதனையில் தற்போது மற்ற மாநிலங்களை விட வேகமாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக 25 சோதனை ஆய்வகங்கள் உள்ளது. இதுதான் கொரோனா சோதனை வேகம் எடுக்க காரணம் ஆகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications