"92" கிளஸ்டர் பரவல்.. மிரட்டும் ராயபுரம்.. அதிர்ச்சியில் மக்கள்.. விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்

சென்னையில் முதலிடத்தில் ராயபுரம்.. 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராயபுரம் பகுதிதான் கொரோனா பாதிப்பில் 92 பேருடன் முதலிடத்தில் உள்ளது... 2 கட்டத்துக்கும், 3-ம் கட்டத்துக்கும் நடுவில் சிக்கி உள்ளது ராயபுரம்.. இது சென்னை நகர மக்களை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது!!

ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையாக இருந்து வருவது சென்னைதான்.. இதில் ராயபுரம் மண்டலம் மொத்தபேரின் கவனத்தையும் திருப்பி உள்ளது.. தினந்தோறும் ஒவ்வொரு நாளும் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது.

coronavirus: chennais rayapuram Corona tops the list with 92

ஒரே நாளில் 8 பேர் பாதிப்பு, 10 பேர் பாதிப்பு என்று கூடியபடியே எண்ணிக்கை பெருகி கொண்டுள்ளது.. நேரடியாக பாதிக்கப்பட்டவர் இதில் ஒருவர் என்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரவியதுதான் பெரும்பாலானோர்.. அதுதான் கவலைத்தரக்கூடியது. இதைதவிர, சிலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது அதைவிட ஷாக்கான தகவலாகும். கிளஸ்டர் பரவல் என்பார்களே, அதற்கு சரியான உதாரணம்தான் ராயபுரம்!!

யாருடனும் தொடர்பில் இல்லாமல், அறிகுறியும் தென்படாமல் கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு விழுந்தடித்து கொண்டு ஓடி டெஸ்ட் செய்தால் கொரோனா உறுதியானதாக ரிசல்ட் வருகிறது. இது மிகவும் ஆபத்தானது! அஜாக்கிரதையால் ஆஸ்பத்திரிக்கே யாரும் போகாமல் விட்டுவிட்டு, அப்படியே தொற்று முற்றிவிட்டாலோ அல்லது அசம்பாவிதம் நடந்தாலோ இந்த வைரஸ்தான் காரணம் என்பது கடைசிவரை தெரியாமல் போக வாய்ப்பும் உள்ளது!!

அதாவது ஒரு மாவட்டத்தின் பாதிப்பு போல ஆகிவிட்டது ஒரு குட்டி ராயபுர மண்டலத்தின் நிலைமை... ஒரே பகுதியில் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு என்பது ரிஸ்க் ஆன நிலைமை.. இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.. ராயபுர பகுதி மொத்த மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலை உள்ளது.

இந்த பகுதியின் பாதிப்பு நிலவரத்தை இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.. சென்னையில் இதுவரை 303 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 92 பேர் ராயபுரம் மண்டலத்தில் வசிப்பதாகவும் கூறினார். அது மட்டுமல்ல.. ராயபுரத்தின் 4 மற்றும் 5 ஆவது வார்டுகளில் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உள்ளது... இந்த பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

நோய் தீவிரம் உள்ள தெருக்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத அளவு மொத்தமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.. அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. மொத்த வியாபாரம் வர்த்தக சங்க வியாபாரிகளோடும் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.. காரணம், தொழில் பாதிக்காத வண்ணம் அவர்கள் எவ்வாறு வியாபாரத்தை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவு எடுக்கவே கமிஷனர் இப்படி ஒரு யோசனையை வெளிப்படுத்தி உள்ளார்!!

ஆரம்பத்தில் யாரோ ஒரு வெளிநாட்டினர் மூலம்தான் முதன்முதலில் ராயபுரத்தில் தொற்று இருப்பதாக சொல்லப்பட்டது.. அதுதான் இன்றைக்கு 92 பேருக்கு பரவி முதலிடத்தில் நின்று மிரட்டுகிறது... 2 கட்டத்துக்கும், 3-ம் கட்டத்துக்கும் நடுவில் சிக்கி திணறுகிறது ராயபுரம்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+