கிளஸ்டர் பரவல்.. சென்னையில் ராயபுரம்தான் இருப்பதிலேயே மோசம்.. கொரோனா எப்படி வேகம் எடுத்தது..பின்னணி
சென்னை: சென்னையில் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக ராயபுரம் மாறியுள்ளது. அங்கு தினமும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா நொடிக்கு நொடி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் நிலைமை என்ன?
தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் மொத்தம் 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முதல் நாள் ராயபுரத்தில் 12 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் நேற்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ராயபுரம் எத்தனை
சென்னையில் உள்ள ராயபுரத்தில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல மாவட்டங்களில் இருப்பதை விட ராயபுரத்தில்தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்று கூறுகிறார்கள். இதில் ராயபுரத்தில் எப்படி கொரோனா பரவியது என்பதில் நிறைய சந்தேகங்கள், மர்மங்கள் நிலவி வருகிறது. ராயபுரத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மூலம்தான் முதலில் கொரோனா தோன்றியது.

எப்படிப்பட்ட பரவல் இது
அதன்பின் அவர் மூலம் அவரை தொடர்பு கொண்ட நபர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. இதை கிளஸ்டர் பரவல் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் சில இடங்களில் மட்டும்தான் கிளஸ்டர் பரவல் உள்ளது. ராயபுரம் பகுதியிலும் கிளஸ்டர் பரவல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கிளஸ்டர் பரவல் என்பது ஸ்டேஜ் 2க்கும் ஸ்டேஜ் 3க்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும்.

இடையில் உள்ள பரவல்
அதாவது லோக்கல் பரவல் மற்றும் கம்யூனிட்டி பரவல் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். இது கொஞ்சம் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரே பகுதியில் பல நூறு பேரை பாதிக்க வாய்ப்புள்ளது. 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது, வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்தியா வந்து, அவர் மூலம் அவரின் உறவினர்களுக்கு கொரோனா பரவி. அந்த உறவினர்கள் மூலம் வேறு சில உறவினர்களுக்கு கொரோனா பரவினால் அது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல்.

இதுதான் காரணம்
ஒருவர் மூலம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களுக்கு கூட கொரோனா பரப்பினால் இப்படி கூறலாம். ராயபுரத்தில் தற்போது இப்படித்தான் கிளஸ்டர் பரவல் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அங்கு கொத்து கொத்தாக மக்களுக்கு கொரோனா ஏற்பட இதுதான் காரணம் ஆகும். சென்னையில் மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வேறு எங்கெல்லாம் பரவி உள்ளது
திருவொற்றியூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications