தமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் பலி.. 114வது நோயாளி பலியானது எப்படி.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 114வது மரணம் கொஞ்சம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் விடாமல் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதிலேயே இன்றுதான் மிக அதிகமாக கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது.

தீவிரம் ஆகும் கொரோனா

தீவிரம் ஆகும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்றுதான் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 4-5 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

தமிழகத்தில் இதுவரை பலியானவர்களில் தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உல்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.

இன்று நிலை

இன்று நிலை

இன்று பலியான நபர்களில் மொத்தம் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர் செங்கல்பட்டை சேர்ந்தவர். தமிழகத்தில் இன்று பலியான எல்லோருக்கும் உடல் ரீதியான பிரச்சனை இருந்துள்ளது. தமிழகத்தில் இன்று பலியான 7 பேரில் 6 பேர் 50 வயதை கடந்தவர்கள். ஒருவர் 33 வயது நிரம்பியவர். 33 வயது நிரம்பிய நபருக்கு ராயப்பேட்டையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர், செப்டிக் ஷாக் என்ற பிரச்சனை ஏற்பட்டு பலியாகி உள்ளார்.

சர்ச்சை காரணம்

சர்ச்சை காரணம்

அதேபோல் இன்னொரு பக்கம் இன்று தமிழகத்தில் 114வது நபர் பலியானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதன்படி, அவருக்கு ஏற்கனவே நுரையீரல் காசநோய் இருந்துள்ளது. இன்று அவர் பலியாக நுரையீரல் அடைப்பு/ COVID -19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா / மட்டும் தொண்டையில் வெட்டிகொண்டது ஆகியவை காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

ஆம் இவர் பலியாக தொண்டையில் தானாக வெட்டிகொண்டது காரணம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா மட்டுமே இவர் பலியாக காரணம் இல்லை. இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவர் எப்போது தொண்டையில் இப்படி வெட்டிக் கொண்டார். எதனால் வெட்டிக் கொண்டார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பலியானதில் இவர் கொஞ்சம் வித்தியாசமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+