கொரோனாவால்.. இந்தியா பட்ட கஷ்டங்களை பார்த்து கண்ணீர்விட்டேன்.. "கூகுள்" சுந்தர் பிச்சை உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கொரோனா மரணங்களை கண்ட போது கண்ணீர்விட்டு அழுதேன் என்று கூகுள் மற்றும் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Recommended Video

    Sundar Pichai உருக்கம்! | Google CEO Sundar Pichai Interview | Oneindia Tamil

    தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை உலகிலேயே மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறது. அதன் தலைமை அமைப்பின் ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கும் இவர்தான் சிஇஓ. டெக் உலகிலேயே மிகப்பெரிய பொறுப்பாக இது பார்க்கப்படுகிறது.

    ஐஐடி கார்க்பூரில் படித்தவர் கூகுளில் 2004ல் பணிக்கு சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தின் டூல்கிட் மற்றும் குரோம் ஆகியற்றை உருவாக்கியது சுந்தர் பிச்சைதான். இவரின் தொடர் கண்டுபிடிப்புகள் காரணமாக அந்த நிறுவனத்தின் சிஇஓவாக உயர்ந்தார்.

    பேட்டி

    பேட்டி

    இந்த நிலையில் பிபிசி நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை மிக நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். தனது பால்யம் தொடங்கி பல்வேறு விஷயங்களை சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் பத்திரிகையாளர் அமோல் ராஜன் "நீங்கள் கடைசியாக எப்போது கண்ணீர்விட்டீர்கள் என்று சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, கொரோனா காரணமாக உலகம் முழுக்க பிணங்களோடு பல லாரிகள் சவக்கிடங்குகள் முன் நின்றதை பார்த்த போது கண்ணீர்விட்டேன்.

    இந்தியர்

    இந்தியர்

    அதோடு இந்தியாவில் கடந்த மாதங்களில் நடந்ததை பார்த்து உடைந்து போனேன். கொரோனா காரணமாக இந்தியா பட்ட கஷ்டங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. நான் அமெரிக்க குடிமகன் என்றாலும் எனக்குள் இன்னும் இந்தியர் இருக்கிறார்.

    இந்தியா இருக்கிறது

    இந்தியா இருக்கிறது

    என்னுடைய மனதில் ஆழத்தில் இந்தியா இன்னும் பிணைந்து இருக்கிறது. என்னில் மிகப்பெரிய பாதி இந்தியாதான். நான் தமிழ்நாட்டில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் வளர வளர தொழில்நுட்பம்தான் எனக்கு உலகத்தை அறிமுகப்படுத்தியது. வீட்டில் ஒன்றாக எல்லோரும் டிவியில் டிடி நிகழ்ச்சிகளை பார்த்தது.

    கற்றுக்கொடுத்தது

    கற்றுக்கொடுத்தது

    சாரே ஜகான் சே அச்சா என்று பொதிகையில் வரும் இசையை கேட்டது. பழைய மாடல் நம்பர் சுற்ற கூடிய பயன்படுத்தியது என்று சிறு வயதில் பல தொழில்நுட்பங்களை, பார்த்து வியந்து இருக்கிறேன். டிவி தொடங்கி போன் வரை எனக்கு எல்லாம் பல வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறது. சிறு சிறு தொழிநுட்பங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்.

    இந்தியா

    இந்தியா

    வரும் காலங்களில் ஏஇ தொழில்நுட்பம் உலகம் ஆளும். அப்போதெல்லாம் புதிய தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வரும் வரை காத்திருப்போம். ஆனால் இப்போதெல்லாம் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வேகமாக வந்துவிடுகிறது. இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகிறது. என்று சுந்தர் பிச்சை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திரம்

    சுதந்திரம்

    சீனாவின் இணைய சுதந்திரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்புகள் எதற்கும் சீனாவில் முழுமையான அனுமதி இல்லை. அங்கு மக்கள் சுதந்திரமாக எங்கள் படைப்புகளை பயன்படுத்த முடியாது. உலகம் முழுக்க இணைய சுதந்திரம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. இணைய சுதந்திரத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் செயல்படுகின்றன என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+