Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேலே பாருங்க.. ஜெட் வேகமெடுத்த சுகாதார துறை.. டிரோன்கள் ரெடி.. அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசுர வேகத்தில் கொரோனா பரவுகிறது.. ஆனால் அதைவிட அசுர வேகத்தில் தடுப்பு பணிகளில் நம் தமிழக அரசு களம் இறங்கிவிட்டது.. போர்க்கால அடிப்படை என்பார்களே அப்படித்தான் இப்போது தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க களம் இறங்கிவிட்டது!!

அந்த வகையில் முதலாவதாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.. ஒருநாள் சுய ஊரடங்கு என்று வலியுறுத்தப்பட்டதற்கே ஏகப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் எழுந்தன. வீட்டுக்குள் உட்கார சொல்லிட்டாரெ, தினக்கூலி எப்படி சாப்பிடுவது? பிரதமருக்கு கேள்விகணைகளை எழுப்பினர்.

ஆனால் 144 தடை உத்தரவு என்று சொல்லிவிடவும், தமிழக அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளை தொடர்ந்து தர முடிவு செய்துள்ளது.. வைரஸ் நிவாரணமாக அனைத்து அட்டைத்தாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

முதலமைச்சர்

முதலமைச்சர்

ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்படும், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஏப்ரல் மாதத்தில் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சரே அறிவித்துவிட்டார். இதைதவிர, 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கொரோனா தொற்றுக்கு தனி மருத்துவமனை நாளைக்கு ரெடியாகிவிடும் என்று விஜயபாஸ்கரும் தெரிவித்துவிட்டார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இது எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆக.. 144 தடை உத்தரவு என்றாலும் இந்த தொற்று பரவிவிடாமல் இருக்கவும் அதே சமயம் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பிரச்சனை வரக்கூடாது என்பதாலும் அரசு ஒவ்வொரு நடவடிக்கையாக பார்த்து பார்த்து செய்து வருகிறது.

தீவிரம்

தீவிரம்

இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இப்போதைக்கு அதிக பிரச்சனையும், ஆபத்தும் அரசு ஆஸ்பத்திரிகளில்தான்.. ஏராளமான நோயாளிகள் உட்பட கண்காணிப்பில் உள்ளவர்களும் இங்குதான் உள்ளனர்.. அதனால் இவர்களுக்கு தொற்று தீவிரமடைய கூடாது என்பதில் சுகாதாரத்துறை மிக மிக கவனமாக உள்ளது.

கிருமிநாசினி

கிருமிநாசினி

அந்த வகையில், டிரோன் மூலம் கிருமிநாசினியை தெளிக்கும் கருவியை விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.. இந்நிகழ்வில் டிரோன் ஒன்று மேலே பறக்கிறது.. அதிலிருந்து கிருமிநாசினி ஸ்பிரே போல தெளித்து விழுகிறது.. இந்த ஆஸ்பத்திரி மொத்தம் 3 கட்டிடங்களைகொண்டது.. ஒவ்வொரு கட்டிடடத்திலும் நோயாளிகள், அவர்களை கண்காணிக்க மருத்துவ குழுக்கள் என திரண்டு உள்ளனர்.

ஸ்பிரே

ஸ்பிரே

அதனால் இந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டால், அது தொற்றின் தீவிரத்தை மட்டுப்படுத்தும்-. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் ட்ரோன்கள் மூலம் ஸ்பிரே அடிக்க முடிவாகி உள்ளத.. இதற்காகவே ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர்.. இப்படி டிரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளித்து.. போர்க்கால நடவடிக்கைககளில்இறங்கியுள்ளது தமிழக அரசு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+