Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சட்டென அதிகரித்த "வைரல் காய்ச்சல்".. ஏகப்பட்ட கேஸ்கள்.. என்ன நடக்கிறது? காரணம் இதுவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திடீரென பலருக்கு வைரல் ஃபீவர் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் மக்கள் இடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் காய்ச்சல் முகாம்களை அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் தினமும் பதிவாகும் ஓமிக்ரான் கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1711 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் பரவல் மூன்றாம் நிலையை அடைந்துவிட்டதாகவும், இதனால் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதாகவும், மூன்றாம் அலை தொடங்கிவிட்டது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

சென்னை

சென்னை

இந்த நிலையில்தான் சென்னையில் திடீர் திருப்பமாக பலருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் வைரல் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையை அணுகும் நபர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் திடீரென அதிகரித்துள்ளது. திடீரென மருத்துவமனைகளில் வைரல் காய்ச்சலுடன் பலர் லைனில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து இப்படி வைரல் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

வைரல் காய்ச்சல்

வைரல் காய்ச்சல்

ஓமிக்ரான் கேஸ்கள் சென்னையில் கண்டிப்பாக சமூக பரவலை எட்டிவிட்டது. அதாவது வெளியூர் செல்லாமல் சென்னைக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கும் கூட ஓமிக்ரான் பரவும் அபாயம் உள்ளது. ஓமிக்ரான் அறிகுறிகள் லேசான காய்ச்சல் அறிகுறிகள் போலவேதான் இருக்கும். தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

ஓமிக்ரான் சென்னை

ஓமிக்ரான் சென்னை

இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் திடீரென வைரல் காய்ச்சல் கேஸ்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பலர் தங்களுக்கும் ஒருவேளை ஓமிக்ரான் இருக்குமோ என்று அச்சம் அடைந்துள்ளனர். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாக பகிர்ந்து.. உங்களுக்கும் வைரல் காய்ச்சல் இருக்கிறதா என்று சக நண்பர்களை கேட்டு உள்ளனர்.

சென்னை காய்ச்சல்

சென்னை காய்ச்சல்

சென்னையை சேர்ந்த சதீஷ் இளவேல் என்ற ஐஐடி ஆய்வு மாணவர் தனக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்த நிலையில், எக்கச்சக்கமான சென்னை வாசிகள் தனக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதில் பதில் அளித்துள்ளனர். அதேபோல் ட்விட்டரிலும் சென்னையை சேர்ந்த பலர் திடீரென எங்கள் குடும்பத்தில் பலருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

அச்சம்

அச்சம்

இப்படி வைரல் காய்ச்சல் ஏற்பட்ட பலர் தங்களுக்கு இருப்பது ஓமிக்ரான் கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். டிசம்பர், ஜனவரியில் வைரல் காய்ச்சல் ஏற்படும் சீசன் என்றாலும், கிட்டத்தட்ட ஓமிக்ரானுக்கும் இதே அறிகுறி என்பதால் மக்கள் இரண்டையும் தொடர்பு படுத்தி அச்சம் அடைந்துள்ளனர். இப்படி திடீரென பலருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது மருத்துவ நிர்வாகிகள் இடையிலும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது - மா சுப்பிரமணியன்
    அரசு என்ன செய்ய வேண்டும்

    அரசு என்ன செய்ய வேண்டும்

    சென்னையில் ஏற்படும் வைரல் காய்ச்சல்களுக்கும் பெரும்பாலும் இந்த குளிர்கால சீசன் காரணமாக இருக்கலாம். அதே சமயம் ஓமிக்ரான் காலம் என்பதால் தீவிர அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் கொரோனா டெஸ்ட் எடுப்பதே நல்லது. அதேபோல் அரசும் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். தெரு தெருவாக முகாம்கள் போட்டு காய்ச்சல் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களை டெஸ்ட் செய்ய வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+