எப்போது மருத்துவமனையில் சேர்ந்தார்.. சென்னையில் 138வது நபர் பலியானது எப்படி? ஷாக் தந்த ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று மொத்தம் 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் 138வது நபர் பலியானது எப்படி என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று மொத்தம் 12 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணத்தில் இன்றுதான் அதிகமான பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக 145 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

குழப்பம் ஏற்பட்டது

குழப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் தமிழகத்தில் 138வது நபர் பலியானது எப்படி என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர் குறித்த தகவல்கள் தவறாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு எப்போது கொரோனா ஏற்பட்டது, எப்போது இவர் கொரோனா காரணமாக பலியானார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அந்த 78 வயது நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் 24ம் தேதி இந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாதிரி சோதனை

மாதிரி சோதனை

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு 22ம் தேதி கொரோனா மாதிரி ஏற்பட்டுள்ளது. அதாவது மருத்துவமனையில் சேரும் முன்பே இவருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு 23ம் தேதி கொரோனா முடிவுகள் வந்துள்ளது . அதில் அவருக்கு கொரோனா இருக்கிறது என்று முடிவுகள் வந்துள்ளது. ஆனால் அதன்பின் மறுநாள்தான் இவர் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்போது பலியானார்

எப்போது பலியானார்

அதாவது இவருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, முடிவு வந்த பின்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர் 22ம் தேதியே பலியாகிவிட்டார் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதாவது 22ம் தேதியே இவர் பலியாகிவிட்டார். ஆனால் அதன்பின் 24ம் தேதி இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

அதாவது பலியான ஒருவரை அதற்கு மறுநாள் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த அறிவிப்பில் ஏதாவது தவறு இருக்கலாம். இந்த நோயாளி 22ம் தேதிக்கு முன்பே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. மோசமான மூச்சு அடைப்பு காரணமாக பலியாகி உள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+