பறக்கும் போன்கால்.. ஒருவரை கூட விடவில்லை.. கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசு செம.. எப்படி செய்கிறது?
சென்னை: கொரோனாவிற்கு எதிரான கண்காணிப்பில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி இருக்கும் நபர்களை தமிழக அரசு மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மிக தீவிரமாக முயன்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்.
558 பேர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

காண்டாக்ட் டிரேசிங் முறை
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு பக்கம் காண்டாக்ட் டிரேசிங் முறையில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது கொரோனா இருக்கும் நபர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டாரோ அவர்களை எல்லாம் கண்டுபிடிப்பது. தமிழக அரசு மிக கட்சிதமாக இந்த பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 571 பேர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்களோ அவர்கள் எல்லோரையும் மிக தீவிரமாக தேடி உடனே தனிமைப்படுத்தி வருகிறது.

2 லட்சம் பேர் கண்காணிப்பு
இதன் மூலம் அரசின் வீட்டு கண்காணிப்பில் 2 லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்கள் வீட்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தீவிரமாக தேடி கண்டுபிடித்து வீட்டில் 21 நாட்கள் வரை வைத்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த பல்வேறு நபர்கள் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

செம
உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தூத்துக்குடிக்கு நபர் ஒருவர் வந்தார். தன்னுடைய உறவினரின் இறுதி சடங்கிற்காக தூத்துக்குடி வந்து இருந்தார். இவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. ஆனாலும் இவர் கொரோனா பாதிக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வந்தவர் என்பதால், இவரின் தொலைபேசி எண்கள் மற்றும் விலாசம் அவரிடம் இருந்து விமான நிலையத்திலேயே வாங்கி வைக்கப்பட்டது.

போன் பறக்கிறது
இந்த நிலையில் இவரை வீட்டிலேயே 1 மாதம் இருக்கும்படி தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி, கடந்த 15 நாட்களாக தினமும் தூத்துக்குடி ஆட்சியர் இவருக்கு நேரடியாக போன் செய்து உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். அதோடு அவர் எங்கே இருக்கிறார், வீட்டில் சரியாக விதிமுறையை பின்பற்றி இருக்கிறாரா என்றும் கடுமையாக சோதனை செய்து வருகிறார். இவரின் வீட்டிலும் quarantined செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

வெளி மாநில நபர்கள்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கும் இதேதான் நிலை. கர்நாடகாவில் இருந்து தனியாக பைக்கில் சென்னை வந்தவர்களை கூட டோல் கேட் கேமரா மூலம் தமிழக போலீஸ் கண்டுபிடிக்கிறது. பின் அவர்களின் வாகனங்களை வைத்து வீடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரணை செய்கிறார்கள்.

நேரடியாக வீட்டிற்கு செல்கிறார்கள்
நேரடியாக வீட்டிற்கு சென்று, அவர்களை 21 நாட்கள் தனியாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு, அதற்கான ஸ்டிக்கர்களை வீட்டு வாசலில் ஒட்டிவிட்டு செல்கிறார்கள். தமிழக எல்லைக்குள் ஒருவர் கூட சுவடின்றி நுழைய முடியாது என்ற நிலையை தமிழக அரசு அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர். தகவல் இன்றி உள்ளே வரும் நபர்களை கூட எல்லையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து சோதனை செய்கிறார்கள்.

உளவுத்துறை செயல்பாடு
இதில் இருந்து தப்பிக்கும் நபர்களை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு பணியில் தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் வைத்து இருக்கும் இன்பார்மர்கள் மூலம் தமிழகம் முழுக்க கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று பலர் கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications