கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன்.. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்!
சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து தாம் குணமடைந்து விட்டதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் தமிழக அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி,பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன்,உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு,கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டது.
இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் குணமடைந்துவிட்டார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து தாம் குணமடைந்து விட்டதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக பொய்யான தகவல் வந்தது. இதை சென்னை மியாட் மருத்துவமனை இதை மறுத்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பழகனும் இதை மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications