சுய சார்பு பொருளாதாராம்.. அன்றே சொன்னாரே சீமான்.. யாருமே கேட்கலை.. வாசகரின் ஆதங்கம்!
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சுய சார்பு பொருளாதாரத்தின் அவசியம் அவசரம் குறித்து சொன்னபோது யாரும் அதை மதிக்கவே இல்லை. பொருட்படுத்தவில்லை. ஆனால் இன்று அதன் அவசியத்தையும், அவசரத்தையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர் என்று நமது வாசகர் கூறியுள்ளார்.
சிவநாதன் என்ற அந்த வாசகர் கூறுகையில், அன்றே சொன்னார் சீமான். சுய சார்பு பொருளாதாரம் தான் அவசியம் அவசரம் தேவை. எல்லாவற்றையும் சென்னை கோவை போன்ற பெரிய நகரம் தோறும் குவித்து விட்டு உணவை தொழில் சாலைகள் தோறும் செய்ய முடியாது மக்களே.

வேளாண்மை, நீர் மேலாண்மை, கிராமம் சார் பொருளாதாரம் தான் அவசியம் என்று சீமான் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார். யாரு கேட்டார்கள்? பெரும் பஞ்சம் வர போகிறது. வீட்டில் ஒரு மாதம் ஆடு கோழிகள் பனை தென்னை மரங்கள் முருங்கை கீரை வகை வச்சு இருந்தால் என்ன நடந்தாலும் பசியால் வாடவே மாட்டோம்.
ஆனால் 32 ஆறுகள் மழை தரும் மலைகள் ஏரி கணவாய் வரை எல்லா சொத்துகளையும் அழித்து வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விட்டோம் என்று அந்த வாசகர் ஆதங்கப்பட்டுள்ளார்.
பால்பாண்டி என்ற இன்னொரு வாசகர் எப்படி பொருளாதார சிரமத்தை தவிர்க்கப் போகிறேன் என்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், இனி எந்த பொருள் வாங்கினாலும் பில் போட்டு தரும் கடையிலே வாங்குவேன். பில் கொடுக்காத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பேன். சின்ன பொட்டி கடைகள் இதற்கு விலக்கு என்று கூறியுள்ளார்.
எழிலரசன் என்ற இன்னொரு வாசகர் கூறுகையில், வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மொபைல் ரீசார்ஜ் குறைக்கலாம். கடன் வேண்டவே வேண்டாம். மது பழக்கம் முழுவதுமாக கைவிடலாம். மாமிச உணவை குறைக்கலாம். டீ காபி குறைக்கலாம். புது துணி வாங்குவதை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம். விழாக்களை எளிமையாக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications