ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்.. நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் வார்னிங்.. மோடிக்கு கடிதம்
இந்தியாவில் கொரோனாவை உடனே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை: இந்தியாவில் கொரோனாவை உடனே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 349,161 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,297 பேர் இதனால் பலியாகி உள்ளனர். 100,337 பேர் கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர். இதுவரை 8 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம்
இந்நிலையில் கொரோனா குறித்து இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் தற்போது பிரதமர் மோடிக்கு முக்கிய கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதத்தில் இந்தியாவில் கொரோனா தீவிரம் அடையலாம் என்று இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதன் தலைவர் தேஷ்முக் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

ஒரே ஒரு நாள் மட்டும் சரியில்லை
ஆனால் ஜனதா ஊரடங்கை ஒரே ஒரு நாள் மட்டும் பின்பற்றினால் சரியாக இருக்காது. இதை தொடர வேண்டும். இந்தியாவில் குறைந்தது 14 நாட்களாவது ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் ஒருவருக்கு 14 நாட்களில் தெரியவரும். கொரோனா தாக்கிய ஒருவருடன் இன்னொருவர் தொடர்பு கொண்டால் அவருக்கு 14 நாட்களில் வைரஸ் தாக்குதல் தெரிய வரும்.

14 நாட்கள் அவசியம் செய்ய வேண்டும்
அதனால் கொரோனா பரவுதலை தடுக்க 14 நாட்கள் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் பரவும் சங்கிலியை தடுக்க முடியும். மக்கள் எல்லோரும் உடனே வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஆனால் இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் இறுதியில் இந்தியாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும். இதை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் வெளியே செல்ல கூடாது
தீவிரமாக பிரதமர் மோடி இதில் செயல்பட வேண்டும். மக்கள் வெளியே செல்வதால் வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் மருத்துவ துறையில் இந்தியாவில் நிறைய குறைபாடுகள் உள்ளது. உடனே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

கண்டிப்பு அவசியம்
முழுவதுமாக தடையை கொண்டு வந்தால் பலர் பாதிக்கப்படுவார்கள். தினமும் பணிக்கு செல்லும் நபர்கள் , தின கூலிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு இரண்டு வாரம் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தி அதை உடனடியாக தடுக்க முடியும். பிரதமர் மோடி உடனடியாக இதில் செயல்பட வேண்டும், என்று இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications