சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு காத்திருக்கும் நல்ல செய்தி இதுதான்.. அதிகரிக்கும் வெப்பநிலை.. கொரோனாவை விரட்டுமா கோடை?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக கொரோனா பாதிப்பு குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும் - Tamilnadu weatherman | Oneindia Tamil

    தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் செல்கிறது. மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில்தான் கொரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது.

    சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,330 லிருந்து 3,839 ஆக அதிகரித்துள்ளது.

    இந்திய நிறுவனம் அசத்தல்.. 500 ரூபாய் செலவு.. 90 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்! ரேபிட் டெஸ்ட் கிட் ரெடி இந்திய நிறுவனம் அசத்தல்.. 500 ரூபாய் செலவு.. 90 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்! ரேபிட் டெஸ்ட் கிட் ரெடி

    வெயில் அதிகரிக்கிறது

    வெயில் அதிகரிக்கிறது

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரிக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தினமும் வெயிலின் அளவு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் வெயில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது.

    வெப்பநிலை அதிகரிப்பு

    வெப்பநிலை அதிகரிப்பு

    தமிழகத்தில் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை தாண்டி உள்ளது. சென்னையில் தினமும் வெப்பநிலை 104 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் தினமும் 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 101 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடிக்க தொடங்கி உள்ளது. இப்படி நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் வந்துள்ளது

    அக்னி நட்சத்திரம் வந்துள்ளது

    ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் 110 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.

    வலிமை இழக்கும்

    வலிமை இழக்கும்

    இந்த நிலையில் வெயில் காரணமாக கொரோனா பரவலில் குறைவு ஏற்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஏற்கனவே கோடை காலம் வந்தால் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழக்கும் என்று அமெரிக்கா அரசில் பணியாற்றும் விஞ்ஞானி வில்லியம் பிராயன் தெரிவித்துள்ளார். அதில் மே மாதம் வந்தால் கொரோனாவின் தாக்கம் குறையும். வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும்.

    அமெரிக்கா செய்த ஆராய்ச்சி

    அமெரிக்கா செய்த ஆராய்ச்சி

    நாங்கள் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம். சூரிய ஒளிகள் கொரோனாவை பெரிய அளவில் கொல்கிறது. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு வெயிலின் தாக்கம் காரணமாக கொரோனா பரவும் வேகம் பெரிய அளவில் குறையும். இது ஒருவகையில் நல்ல செய்தி என்று கூறியுள்ளார்.

    வேகம் குறையுமா ?

    வேகம் குறையுமா ?

    அமெரிக்கா முழுக்க இந்த சோதனை முடிவுகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த முடிவுகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக கொரோனா பரவல் குறையுமா, பொது இடங்களில் உள்ள கொரோனா வெயில் காரணமாக பலியாகுமா, அதன் வேகம் குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    புதிய நம்பிக்கை

    புதிய நம்பிக்கை

    அமெரிக்க ஆய்வுதான் இந்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கோடை காலத்தில் கொரோனா வேகம் குறைத்துவிட்டு மீண்டும் மழை காலத்தில் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இப்போது கொரோனா போனாலும் ஜூலை மாதத்திற்கு பின் இந்தியாவில் மீண்டும் கொரோனா வரும் என்று டெல்லி எய்ம்ஸ் கூறியுள்ளது. அதனால் இப்போது தமிழகத்தில் கொரோனா குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எப்போதும் சென்னையை வாட்டி எடுக்கும் வெயில் இப்போது காப்பாற்ற வாய்ப்புள்ளதா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    விரைவில் தெரியும்

    விரைவில் தெரியும்

    ஆனால் இன்னொரு பக்கம் கோடை வெப்பம் காரணமாக கொரோனா குறையாது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெப்பம் காரணமாக கொரோனா பலியாகாது. முழுதாக மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா பரவலை தடுக்க முடியாது. எப்போதும் போல பரவல் தொடரும் என்று கூறியுள்ளனர். இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுக்க கோடை வெப்பம் காரணமாக வெயில் குறையுமா என்பது போக போகத்தான் தெரியும்.

    English summary
    Coronavirus: Increase in Temperature in Tamilnadu may decrease the infection rate in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X