5000 வீடுகள்.. சென்னையின் பெரிய குடியிருப்பு.. கண்ணகி நகரில் ஒரே நாளில் பல கேஸ்கள்.. அடுத்த கிளஸ்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கண்ணகி நகரில் அடுத்தடுத்து கேஸ்கள் ஏற்பட்டு வருவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது.நேற்று மட்டும் சென்னையில் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 4372 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னை கேஸ்கள் எப்படி

சென்னை கேஸ்கள் எப்படி

சென்னையில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகமாக பரவி வருவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி சென்னையில் கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு மார்க்கெட்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் மட்டும் பல நூறு பேருக்கு கேஸ்கள் பரவி உள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் மூலம் 1200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணகி நகர் கேஸ்கள்

கண்ணகி நகர் கேஸ்கள்

இந்த நிலையில்தான் சென்னையில் கண்ணகி நகரில் அடுத்தடுத்து கேஸ்கள் ஏற்பட்டு வருவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்ணகி நகர் இன்னொரு கிளஸ்டர் போல உருவெடுக்குமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்திற்கு நிறைய காரணம் உள்ளது. கண்ணகி நகர் ஹவுசிங் போர்ட் பகுதி சென்னையில் மிகப்பெரிய ஹவுசிங் போர்ட் பகுதி ஆகும். 250 சதுர அடியில் இந்த இடம் அமைந்து உள்ளது.

மொத்த வீடுகள் எத்தனை

மொத்த வீடுகள் எத்தனை

மொத்தம் 5000 வீடுகள் இங்கு உள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் மிகவும் நெருக்கடியான இடத்தில் வசித்து வருகிறார்கள். இங்கு போதுமான சுகாதார வசதி இல்லை. இந்த நிலையில் இங்குதான் இன்று காலையில் இருந்து 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த பலருக்கு கொரோனா பரவுமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம்

மக்கள் தொகை அதிகம்

சென்னையில் அதிக மக்கள் தொகை வசிக்கும் குடியிருப்பு பகுதி ஒன்றில் இப்படி கொரோனா கேஸ்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பல குடும்பங்கள் இருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை உடனே செய்ய வேண்டும். கண்ணகி நகர் ஹவுசிங் போர்ட் இன்னொரு கிளஸ்டராக மாறும் முன் அங்கு உடனே கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

காய்கறி கடை எப்படி

காய்கறி கடை எப்படி

சென்னையில் காய்கறி கடை தொடங்கி தூய்மை பணியாளர்கள் வரை பலர் இந்த பகுதியில் இருந்துதான் வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் சென்னை பெரிய அளவில் பாதிக்கும். சென்னை மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே கோயம்பேடு கிளஸ்டரே சென்னையை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது இன்னொரு கிளஸ்டருக்கு சென்னை தயாராக முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+