ஆசியாவின் பெரிய மார்க்கெட்.. கொரோனாவால் மோசமாக பாதிக்கும் கோயம்பேடு.. திடீர் எபிசென்டர் ஆனது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பின் எபிசென்டராக தற்போது கோயம்பேடு மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

Recommended Video

    Lockdown extended by two weeks | நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

    சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 100க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சென்னையில் 138 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    எத்தனை

    எத்தனை

    சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் மிக மோசமான பகுதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மாறியுள்ளது. சென்னையின் எபிசென்டராக கோயம்பேடு மாறியுள்ளது. தினமும் பல லட்சம் பேர் வந்து பொருட்கள் வாங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று கோயம்பேட்டில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இன்று காலை அதே மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை கோயம்பேடு மார்க்கெட்டில் 42 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    முதல் கேஸ் கண்டுபிடிப்பது கஷ்டம்

    முதல் கேஸ் கண்டுபிடிப்பது கஷ்டம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் இப்படி நிறைய கொரோனா கேஸ்கள் ஏற்படுத்துவதற்கு பின் நிறைய சிக்கல், பிரச்சனைகள் இருக்கிறது. உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் நபருக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மார்கெட்டிற்கு வந்த யார் மூலம் அங்கு முதலில் கொரோனா பரவியது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது கோயம்பேடு மார்க்கெட்டின் பேஷண்ட் 0 யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    காண்டாக்ட் டிரேஸ் செய்வது கஷ்டம்

    காண்டாக்ட் டிரேஸ் செய்வது கஷ்டம்

    இதை கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது. அங்கு தினமும் பல்லாயிரம் பேர் வந்து செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது முதல் நபர் யார் என்பதை கண்டுபிடிப்பது இயலாத காரியம். அதேபோல் இங்கே காண்டாக்ட் டிரேஸ் செய்வதும் இயலாத காரியம் ஆகும். உதாரணமாக ஒரு காய்கறி கடைக்காரருக்கு கொரோனா வந்தால் அருகே உள்ள கடைகளில் கொரோனா பரவி உள்ளதா என்று காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியும். ஆனால் அந்த கடைக்கு யார் எல்லாம் வந்தார்கள் என்று கூற முடியாது.

    குழப்பம்

    குழப்பம்

    அங்கிருக்கும் கடைக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் பேர் வந்து சென்று இருப்பார்கள். அந்த கடைக்கு வந்த சென்ற நபர்களுக்கு கூட எந்த கடையில் பொருள் வாங்கினோம் என்பது நினைவில் இருக்காது. இதனால் காண்டாக்ட் டிரேஸ் செய்வது என்பது கோயம்பேடு மார்க்கெட்டில் மிக மிக சிரமமான விஷயம் ஆகும். இதுதான் அங்கு நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள். இங்கு மேலும் கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    மக்கள் கூட்டம் குறையவில்லை

    மக்கள் கூட்டம் குறையவில்லை

    இத்தனை இருக்க இப்போதும் கூட கோயம்பேடு மார்க்கெட் பகுதி மொத்தமாக மூடப்படவில்லை. சில்லரை விற்பனை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இப்போதும் மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருவது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தொடர் கதையாகி உள்ளது. மொத்தமாக மார்க்கெட்டை மூடும் வரை அங்கு மக்களை கட்டுப்படுத்த முடியாது.

    வீட்டிற்கு பரவுகிறது

    வீட்டிற்கு பரவுகிறது

    இப்படி மார்க்கெட் செல்லும் நபர்கள் மூலம் அவர்களின் வீடுகளில் இருக்கும் நபர்களுக்கும் கொரோனா பரவுகிறது. உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் நபர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 15 பேருக்கு நேற்று வரை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதாவது கடை வைத்திருக்கும் நபர்களின் மனைவி, குழந்தைகள் என்று வீட்டிற்கும் இந்த மார்க்கெட் மூலம் கொரோனா பரவுகிறது. மார்க்கெட் மட்டுமின்றி வெளியேவும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

    சரக்கு வாகனம்

    சரக்கு வாகனம்

    இதெல்லாம் போக இங்கு மொத்த விற்பனை செய்ய வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் என்பதால் இவர்கள் பயணம் செய்ய தடை இல்லை. கோயம்பேடு வரும் இவர்கள், இங்கிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சிக்கு செல்கிறார்கள். இவர்கள் கோயம்பேட்டில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனாவை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து செல்கிறார்கள். உதாரணமாக, கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் 7 பேர் திருச்சி வந்துள்ள நிலையில் 2 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.

    மிகப்பெரிய மார்க்கெட்

    மிகப்பெரிய மார்க்கெட்

    இங்கிருந்து இப்படி பல இடங்களுக்கு கொரோனா பரவ தொடங்கி உள்ளது. அதேபோல் கோயம்பேடு சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.சென்னை கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்தை அமைந்துள்ளது. இங்கு 3200 கடைகள் உள்ளது. தினமும் இங்கு 1 லட்சம் பேர் வரை வந்து செல்கிறார்கள். இவ்வளவு பெரிய மார்க்கெட்டில் கண்டிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். தாற்காலிகமாக சந்தையை மூடும் வரை பரவலை தடுக்க முடியாது என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+