லாக் டவுன் லிஸ்டில் வந்த சென்னை.. தப்பித்த செங்கல்பட்டு.. ஏற்பட போகும் குழப்பங்கள்.. புது சிக்கல்!
மத்திய அரசு 75 மாவட்டங்களில் அறிவித்து இருக்கும் லாக் டவுன் காரணமாக சென்னையில் சில குழப்பங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை: மத்திய அரசு 75 மாவட்டங்களில் அறிவித்து இருக்கும் லாக் டவுன் காரணமாக சென்னையில் சில குழப்பங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 360 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இதனால் அதிரடியாக கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுக்க மொத்த 75 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 10 மாவட்டங்களிலும் , மகாராஷ்டிராவில் 12 மாவட்டங்களிலும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் எப்படி
இதில் தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பகுதிகளில் அடிப்படையில் இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்ல முடியாது. பொது வாகனங்கள், ஆட்டோ, டாக்சி இந்த மாவட்டத்திற்கு செல்லாது.

ஆனால் என்ன
இதில் ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் அங்கு லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உறவினர்கள் வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் காஞ்சிபுரத்தில் முதல் நபருக்கு தமிழகத்தில் கொரோனா வந்தது. அவர் குணப்படுத்தப்பட்டுவிட்டார். ஆனாலும் பாதுகாப்பு கருதி அங்கு லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன குழப்பம்
இந்த நிலையில் தற்போது சென்னையில் இந்த லாக் டவுன் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் லாக் டவுன் செய்யப்பட்டால் அங்கிருந்து செங்கல்பட்டிற்கு வாகனங்களை இயக்க முடியாது. செங்கல்பட்டிற்கு ஆட்டோ, டாக்சிகளை சென்னையில் இருந்து இயக்க முடியாது. இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்படும். செங்கல்பட்டு மாவட்டம் சில மாதங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டது.

செங்கல்பட்டு எப்படி
செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, செயின்ட் தாமஸ் மவுண்ட் , பம்மல், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், அச்சரப்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளது. இங்குதான் பல ஐடி நிறுவனங்கள் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டில் லாக் டவுன் அறிவிக்கப்படவில்லை. அங்கு கொரோனா பாதித்தவர்கள் இல்லை என்பதால் லிஸ்டில் இடம்பெறவில்லை.

பெரிய குழப்பம்
இதனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மக்கள் எப்படி பயணம் செய்வார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் இன்று இந்த லாக் டவுனை சென்னையில் அமல்படுத்த வேண்டும். ஆனால் சென்னையில் மட்டும் தமிழக அரசு விரிவான ஆலோசனைக்கு பின்பே லாக் டவுன் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications