கொரோனா: மெரினாவில் குவிக்கப்பட்ட போலீஸ்.. தமிழ்நாடு கடற்கரைகளில் போடப்பட்ட ஞாயிறு லாக்டவுன்!
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று தமிழ்நாட்டில் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 26,21,086 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடத்த 24 மணி நேரத்தில் 1575 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அங்கு 16,315 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25,69,771 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1610 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 35,000 பேர் பலியாகி உள்ளனர்.

பள்ளிகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலுக்கு இடையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9,10,11,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆங்காங்கே பல்வேறு பள்ளிகள் ஒரு சில மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல மாணவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் சமயங்களில் உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுகிறது.

கடற்கரை
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்கு இடையே சினிமா தியேட்டர்கள், கடற்கரைகள் ஆகியவற்றிலும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வார இறுதி நாட்களில் கடற்கரைகளில் அதிக அளவில் மக்கள் கூடினார்கள். கூட்டம் கூட்டமாக பல ஆயிரம் பேர் மெரினா மற்றும் பெசன்ட் நகர் பீச்களில் கூடினார்கள். இதனால் அங்கு பெரிய அளவில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. கடற்கரைகளுக்கு பலர் குழந்தைகளோடு வந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

மரணம்
இன்னொரு பக்கம் கடற்கரைகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் 10 பேர் வரை மெரினா உள்ளிட்ட பல்வேறு சென்னை கடற்கரைகளில் காணாமல் போனார்கள். கடலில் மூழ்கி வரிசையாக 10 பேர் காணாமல் போனார்கள். கடற்கரை திறக்கப்பட்ட முதல் நாளே 3 மாணவர்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உடல் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் இன்னும் சில மாணவர்கள், இளைஞர்கள் கடலில் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. சென்னையின் வெவ்வேறு கடல் பகுதிகளில் இவர்களின் உடல் கரை ஒதுங்கியது.
Recommended Video

லாக்டவுன்
இந்த நிலையில் கடற்கரைகளில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவும் தற்போது கடற்கரைகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் மூலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் இப்போது கடற்கரைகளில் மக்கள் கூடுவதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா
இன்று சென்னை மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் யாரும் காலையில் சூரிய உதயம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மெரினாவில் அனைத்து பக்கங்களிலும் போலீசார் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மெரீனாவிற்கு வரும் மக்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications