Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா: மிகமோசமான நிலையில் தோல் தொழில்.. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பேரபாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் தோல் தொழில் எளிதில் மீண்டு வர இயலாத அளவுக்கு முடங்கி உள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பேரபாயம் எழுந்துள்ளது.

Recommended Video

    வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

    இந்தியாவில் தென் மாநிலங்களில் தோல் தொழிற்சாலைகள் மிக அதிகம். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, வேலூர், ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலஜா, வாணியம்பாடி, ஈரோடு மற்றும் திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    Coronavirus Lockdown: TN Leather units labourers to loss job

    லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் பதப்படுத்தப்பட்ட தோல்கள் குடோன்களில் முடங்கிக் கிடக்கின்றன. வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தோல் மற்றும் தோல் பொருட்கள் துறைமுகங்களில் முடங்கிக் கிடக்கின்றன.

    சர்வதேச நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருப்பதால் பெறப்பட்ட ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி நான்கு புறங்களிலும் தோல் தொழில் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இதனால் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

    அரசின் உதவியின்றி தோல் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவது கடினம் என்கின்றனர். அதேநேரத்தில் தொழிற்சாலைகளில் வேலைகள் இல்லாததால் இங்கு பணிபுரிந்து வரும் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் நிலை இருக்கிறது.

    தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு படிநிலைகளில் வந்துசேர வேண்டிய பெருமளவு பணம் முடக்கத்தில் இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தருவதற்கு வேலையும் இல்லை. இதனால் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்புவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இது மிக மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கின்றனர். தொழிற்சங்க நிர்வாகத்தினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+