மதுரை ஊரடங்கு : கொரோனா நிவாரணம் ரூ.1000 வீடு வீடாக வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும்என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவது போல மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 27ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 12 நாட்கள் மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வீடு வீடாக சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முழு முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 27ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications