Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"Airborne".. காற்றிலும் நீண்ட தூரம் வரை பரவுகிறதா கொரோனா வைரஸ்.. வூ திடீர் எச்சரிக்கை.. முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; 1 மீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவைரஸ் காற்றிலும் நீண்ட தூரம் பரவுகிறது.. WHO புதிய வழிகாட்டுதல்களின் முழு தகவல்

    2019 இறுதியில் கொரோனா தொற்று தொடங்கி, கொரோனாவிற்கு எதிராக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்ட வேக்சின்களை உருவாக்கி விட்டாலும் கூட, இன்னும் கொரோனா குறித்த முழுமையான விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை. கொரோனாவின் உண்மையான குணம் என்ன? அது எப்படிப்பட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.

    முக்கியமாக கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. இதன் வேகமான மியூட்டேஷன் அதை பற்றி தெரிந்து கொள்ளவதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் நிறைய சவால்களை ஏற்படுத்தி உள்ளது.

    எப்படி

    எப்படி

    இந்த கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்தே.. அந்த வைரஸ் எப்படி எல்லாம் பரவும் என்பதை உலக சுகாதார மையம் விளக்கி வருகிறது. 2019 இறுதியில், நோயாளிகள் மட்டும் மாஸ்க் போட்டால் போதும் என்று கூறியது. பின்னர் எல்லோரும் மாஸ்க் போட வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூறியது. பின்னர் பொது இடங்களில் கொரோனா இருக்கலாம் என்றும் கூறியது.

    14 நாட்கள்

    14 நாட்கள்

    கதவு கைப்பிடி, படிகள், லிப்ட் என்று பல இடங்களில் கொரோனா ஒரு வாரம் வரை கூட உயிர் வாழும், இதன் மூலம் கூட கொரோனா பரவும் என்று உலக சுகாதார மையம் கூறியது. ஆனால் இதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உலக சுகாதார மையம் தொடர்ந்து மறுத்து வந்தது. கொரோனா காற்றில் பரவ வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார மையம் கூறியது.

    காற்றில் பரவுதல்

    காற்றில் பரவுதல்

    பல ஆரய்ச்சியாளர்கள் கொரோனா காற்றில் பரவும் என்று கூறினார்கள். ஆனால் இதை உலக சுகாதார மையம் ஏற்கவில்லை. உலக சுகாதார மையத்தின் கருத்துப்படி, கொரோனா அதிகபட்சம் 1 மீட்டர் வரை மட்டுமே காற்றில் பரவும், இதனால் அருகருகே இருக்கு மக்கள் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன என்று உலக சுகாதார மையம் கூறியது.

    மறுப்பு

    மறுப்பு

    மூச்சு துகளிலும், காற்றில் ஊழல் நீர் துகளிலும் கொரோனா 1 மீட்டர் வரை பரவும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்தது. ஆனால் மொத்தமாக காற்றில் பல மீட்டர்களுக்கு கொரோனா பரவும் என்பதை உலக சுகாதார மையம் தொடர்ந்து மறுத்தே வந்ததே.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் தற்போது உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கும் புதிய கட்டுப்பாடுகளில், கொரோனா வைரஸ் என்பது காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் 1 மீ தூரம் மட்டுமின்றி, அதற்கும் மேல் பல மீட்டர்களுக்கு பரவலாம், கொரோனா நீண்ட தூரம் பயணிக்கலாம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

    எவ்வளவு தூரம்

    எவ்வளவு தூரம்

    அதாவது 1 மீட்டர் தூரத்திற்கு அதிக தூரத்தில் உள்ள மக்கள் கூட இதனால் பாதிக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இது கிட்டதட்ட காற்றில் பரவும் என்பதை உலக சுகாதார மையம் கூறியுள்ளது. முன்பெல்லாம் கொரோனா 1 மீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்கும் போது அது புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும், இதனால் அது பயணிக்க முடியாது என்று கூறப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இப்போது புவி ஈர்ப்பு விசையை மீறி, கொரோனா கூடுதல் தூரம் பயணிக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் என்பதை உலக சுகாதார மையம் தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த வைரஸ் காற்றில் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன.. இதை மனதில் வைத்தே மத்திய அரசு சில நாட்களுக்கு முன், வீட்டில் இருக்கும் போது கூட மாஸ்க் போட வேண்டும், டபுள் மாஸ்க் போட வேண்டும் என்றெல்லாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+