"தொட்டு விட தொட்டு விட தொடரும்".. வாத்தியார் சொல்லிட்டார்.. இனியும், கேட்காம இருந்தா அவ்வளவுதான்!
சென்னை: "தொட்டு விட தொட்டு விட தொடரும்" என்று எம்ஜிஆர் பாடிக் கொண்டிருக்கும் சத்தம் ஊரெல்லாம் காற்றில் நுழைந்து காதில் துளைத்து செல்கிறது! எல்லாம் இந்த கொரோனாவால் வந்தது.. வாத்தியார் பாடலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு பாடலாக்கி கொண்டிருக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்!
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிப்படையே யாரும் யாரையும் தொடக்கூடாது.. நெருக்கம் இருக்ககூடாது.. கூட்டமே கூட கூடாது.. அதனால்தான் சுய ஊரடங்கு, 144 தடை உத்தரவு என ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.. விழிப்புணர்வு என்பது பொதுவாக அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் அல்லது இயக்கம், சங்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்த்தப்படும்.
ஆனால் கொரோனாவை பொறுத்தவரை தனிநபர்களே களம் இறங்கிவிட்டனர்.. இது உயிர் பிரச்சனை என்பதால் முக்கியத்துவம் தந்து பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒருபுது வித விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இது முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காகவே நம் நெட்டிசன்கள் ஏற்படுத்தி வருகினற்னர்.. இது ஒரு எம்ஜிஆர் பாடல்.
"தர்மம் தலைகாக்கும்" படத்தில் வரும் தொட்டு விட தொட்டுவிட தொடரும் என்ற பாடல்தான் அது.. இந்த படத்தில் எம்ஜிஆர் ஒரு டாக்டர்.. ஒரு சீனில் எம்ஜிஆருடன் நோயாளி போல் சரோஜாதேவி நடித்திருப்பார்.. தனக்கு காய்ச்சல் வந்துவிட்டது பொய்யாக என்று சொல்லவும், எம்ஜிஆர் சரோஜாதேவி கையை பிடித்து நாடி பார்ப்பார்.. அப்போது வரும் லவ் பாட்டுதான் இது.
"தொட்டுவிட தொட்டுவிட தொடரும்... கை பட்டுவிட பட்டுவிட மலரும்" என்பதுதான்.. இந்த பாடல் பட்டிதொட்டிகளில் ஒலிக்காத நாளே அன்று இல்லை.. இன்றும்கூட கிராம மக்களுக்கு எம்ஜிஆர்தான் சகலமும்.. அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், யாரையும் தொடக்கூடாது, வைரஸ் பரவும் என்பதற்காகவும் இந்த பாடலை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்! எதற்கோவோ பாடி வைத்த பாடல், இன்று நம் எல்லாருக்குமே ஒரு பாடமாகி வருவதும் அறிவியல் விசித்திரம்தான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications