சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க் இல்லை.. வயது வித்தியாசம் இல்லை.. டாஸ்மாக்கில் காணாமல் போன சமூக இடைவெளி.. அதிர்ச்சி!

தமிழகம் முழுக்க இன்று டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் முண்டி அடித்துக்கொண்டு நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுக்க இன்று டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் முண்டி அடித்துக்கொண்டு நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Salem Tasmac | மது வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்று வாங்குகின்ற குடிமகன்கள்

    தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க குடிமகன்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் முன் கூட்டம் கூடி வருகிறது.

    அன்பார்ந்த மக்களே! கோவை டாஸ்மாக் கடையில் முதல் 2 டோக்கன்களை 2 ஸ்பெயின் குடிமகன்கள் தட்டி சென்றனர்! அன்பார்ந்த மக்களே! கோவை டாஸ்மாக் கடையில் முதல் 2 டோக்கன்களை 2 ஸ்பெயின் குடிமகன்கள் தட்டி சென்றனர்!

    நேரம் எப்படி

    நேரம் எப்படி

    இந்த நிலையில் இப்படி மதுக்கடைகளுக்கு செல்லும் நபர்களுக்கு என்று அரசு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருந்தது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்கள் மதுவாங்கலாம். இவர்கள் மற்ற நேரங்களில் சென்றால் மது வாங்க முடியாது, பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் வர கூடாது

    டாஸ்மாக் வர கூடாது

    காலையில் எல்லா வயதினரும் டாஸ்மாக் வர கூடாது. மொத்தமாக எல்லோரும் வந்தால் கூட்டம் அதிகமாகும். இதனால் சமூக இடைவெளி பாதிக்கும். இதனால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படலாம். அதை தடுக்கும் பொருட்டு இப்படி நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல் வயதானவர்கள் மாலை நேரத்தில் வந்தால் சிக்கலாகும் என்பதால் அவர்களுக்கு என்று காலை நேரம் ஒதுக்கப்பட்டது.

     நேரத்தை பின்பற்றவில்லை

    நேரத்தை பின்பற்றவில்லை

    ஆனால் இந்த நேரத்தை யாரும் பின்பற்றவில்லை. இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மாலைதான். ஆனால் காலையிலேயே இளைஞர்கள் டாஸ்மாக்கில் கூடினார்கள். அதிலும் மிக அதிக எண்ணிக்கையில் முதியவர்களை விட இளைஞர்கள்தான் லைனில் நின்றார்கள். இவர்கள் நிற்பதை அங்கு யாரும் தட்டிக்கேட்கவில்லை. நீங்கள் மாலை வாருங்கள் என்று கூறி யாரும் அவர்களை திரும்ப அனுப்பவில்லை.

    ஆதார் கார்ட் காட்டி சென்றனர்

    ஆதார் கார்ட் காட்டி சென்றனர்

    பொதுவாக ஆதார் கார்ட் காட்டி அதில் வயது மற்றும் ஏரியாவை நிரூபித்துவிட்டுதான் மதுபானம் வாங்க முடியும். வேறு ஏரியா மக்களுக்கு வேறு பகுதியில் மது கொடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் வெவ்வேறு இடங்களில் மதுபானங்களை வாங்க மக்கள் லைனில் கூடி உள்ளனர். வயது வித்தியாசம், ஏரியா வித்தியாசம் எதுவும் இன்றி குடிமகன்கள் இப்படி லைனில் நின்றது பெரிய அதிர்ச்சி அளித்தது.

    சமூக இடைவெளி இல்லை

    சமூக இடைவெளி இல்லை

    அதோடு லைனில் நின்ற பலர் சமூக இடைவெளிவிட்டு நிற்கவில்லை. அதேபோல் இவர்களில் பலர் மாஸ்க் அணியவில்லை. போலீசை பார்க்கும் போது மட்டும் முகத்தில் துண்டு போட்டுகொண்டார்கள். ஏற்கனவே தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போது டாஸ்மாக் காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Neither Social Distance nor Mask, Tasmac invites infection fear in Tamilnadu today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X